விமானப் பயணிகளுக்கு அதிர்ச்சியளித்த போரிஸ் ஜான்சன்: அவசரகதியில் லண்டனுக்கு பயணம்
பிரித்தானியாவின் பிரதமர் பதவி போட்டிக்காக லண்டன் திரும்பும் போரிஸ் ஜான்சன்.
விமானத்தில் பொருளாதார வகுப்பில் பயணத்து சக பயணிகளுக்கு திகைப்பூட்டினார்.
முன்னாள் பிரதமர் மற்றும் தற்போதைய பிரதமர் போட்டிக்கான முன்னணி போட்டியாளராகிய போரிஸ் ஜான்சன் விடுமுறைக்கு பிறகு, பிரித்தானியா திரும்பும் போது விமானத்தில் பொருளாதார வகுப்பில் பயணித்து அனைவரையும் திகைப்பூட்டினார்.
பிரித்தானியாவில் கொரோனா கால ஊரடங்கின் போது நடைபெற்ற விழாக்களில் பிரதமாக இருந்த போரிஸ் ஜான்சன் விதிகளை மீறி கொண்டாங்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, தனது பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இதையடுத்து கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெற்ற அடுத்த பிரதமருக்கான தேர்தலில் லிஸ் டிரஸ் வெற்றிப் பெற்றார், ஆனால் அவரது அரசாங்கத்தின் மோசமான பொருளாதார திட்டங்களால் நாட்டின் சந்தை சரிவை சந்திக்கவே 44 நாட்களிலேயே தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் பிரித்தானியாவின் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான சூழ்நிலையில் கன்சர்வேட்டிவ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. இதற்கான போட்டியில் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் மற்றும் முன்னாள் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் முன்னிலையில் இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
இதனால் டொமினிகன் குடியரசில் இரண்டு வாரங்களாக தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் விடுமுறையை கழித்துக் கொண்டு இருந்த போரிஸ் ஜான்சன் லண்டனுக்கு திரும்பி உள்ளார்.
இவற்றில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், டொமினிகன் குடியரசில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட போரிஸ் ஜான்சன் விமானத்தின் பொருளாதார வகுப்பில் பயணம் செய்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: இளவரசர் ஹரியால் மன்னர் சார்லஸுக்கு எழுந்துள்ள சிக்கல்: பதற்றத்தில் அரண்மனை
இது தொடர்பாக ஸ்கை நியூஸ் நிருபர் மார்க் ஸ்டோனின் தெரிவித்த தகவலில், முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும், அவரது குடும்பத்தினரும் விமானத்தில் ஏறும் போது சக பயணிகளிடம் கலவையான எதிர்வினை இருந்தது என தெரிவித்துள்ளார்.
பல பயணிகள் சற்று திகைப்புடன் காணப்பட்டதாகவும், மேலும் சிலர் கூச்சலிட்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.