பிரித்தானியாவின் மந்திரி சபையை மாற்றியமைக்க போரிஸ் திட்டம்: தேர்தல் பின்னடைவால் அதிரடி முடிவு!
பிரித்தானியாவின் உள்ளாட்சி தேர்தலில் Conservative கட்சி மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டதை அடுத்து, மந்திரி சபையை பிரதமர் போரிஸ் ஜான்சன் மாற்றியமைப்பது தொடர்பாக திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவின் பெருநகர சபைகளுக்கான உறுப்பினர்கள் தேர்தல் மற்றும் வேல்ஸ், ஸ்காட்லாந்து ஆகியவற்றில் உள்ள உள்ளூர் அதிகாரிகளை தேர்வு செய்வது தொடர்பான தேர்தல் ஆகியவை கடந்த மே 5ம் திகதி நடைபெற்றது.
இந்த தேர்தலுகான வாக்குபதிவை நடைபெற்றதை தொடர்ந்து, அதன் வாக்கு எண்ணிக்கையானது மே 6ம் திகதியான நேற்று நடைபெற்றது.
இதில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் Conservative கட்சியை, கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான Labour கட்சி மிகவும் மோசமான நிலைமைக்கு பின்னுக்கு தள்ளியது.
மொத்தமுள்ள 146 கவுன்சில் இடங்களில் 143 கவுன்சில் இடங்களுக்கான முடிவுகள் வெளியாகிய நிலையில், இதில் Labour கட்சி கூடுதலாக 6 கவுன்சில்களை கைப்பற்றி 65 கவுன்சில்களில் வென்றுள்ளது.
போரிஸ் ஜான்சனின் தலைமையிலான Conservative கட்சி 11 கவுன்சில் இடங்களை இழந்து மொத்தம் 35 கவுன்சில்களில் வென்றுள்ளது.
இதனை தொடர்ந்து, நேற்று பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் ஜான்சன், தேர்தல் முடிவுகள் Conservative கட்சி உறுப்பினர்களான Tories-களுக்கு இது மிகவும் கடினமான இரவாக மாற்றி இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
இந்தநிலையில், உள்ளாட்சி தேர்தலில் Conservative கட்சி மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டதை தொடர்ந்து, மந்திரி சபையை மாற்றியமைப்பது தொடர்பாக பிரதமர் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டு வருவதாக பிரித்தானியாவின் அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் அடுத்து நடக்கவிருக்கும் தேர்தலில் Tories-களின் முக்கிய குறிக்கோளாக பிரித்தானியாவின் வாழ்க்கை செலவு பிரச்சனைகளை எதிர்கொள்வது தொடர்பாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
ஏரிசக்தி பொருள்களின் விலை தொடர்ந்து உயர்ந்தால் அதற்கான கூடுதல் உதவிகளை பிரித்தானிய அரசாங்கம் வருங்காலங்களில் செய்யும் என பிரதமர் நேற்று அளித்த பேட்டியில் தெரிவித்து இருந்தது குறிப்பிடதக்கது.
கூடுதல் செய்திகளுக்கு: ஏரிவாயு கசிவினால் புகழ்பெற்ற நட்சத்திர ஹோட்டலில் பயங்கர வெடிவிபத்து: 22 பேர் பலி!
தேர்தலில் Conservative கட்சி பின்னுக்கு தள்ளப்பட்டதற்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் தான் முக்கிய காரணம் என்றும், அதனால் அவர் பதவிவிலக வேண்டும் என்றும் ஜான்சனின் எதிர்பாளர்கள் சிலர் தெரிவித்துவருகின்றனர்.