ஏரிவாயு கசிவினால் புகழ்பெற்ற நட்சத்திர ஹோட்டலில் பயங்கர வெடிவிபத்து: 22 பேர் பலி!
கியூபாவின் தலைநகர் ஹவானாவில் உள்ள புகழ்பெற்ற சரடோகா ஹோட்டலில் நடைபெற்ற வெடிவிபத்தில் 22 நபர்கள் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹவானாவில் உள்ள 5 நட்சத்திர வசதி கொண்ட புகழ்பெற்ற ஹோட்டலான சரடோகாவில் (Saratoga hotel)திடிரென ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 22 நபர்கள் இறந்து இருப்பதாகவும், 70 நபர்கள் வரை படுகாயம் அடைந்து இருப்பதாகவும் அந்த நாட்டின் அரசு ஊடகங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன.
இந்த விபத்து குறித்து கியூபாவின் அரசு தொலைகாட்சியில் பேசிய அந்த நாட்டின் ஜனாதிபதி Miguel Diaz-Canel, ஏரிவாயு கசிவினால் வரலாற்று புகழ்பெற்ற சரடோகா ஹோட்டலில் ஏதிர்பாராத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தானது, வெடிகுண்டு தாக்குதலோ அல்லது பயங்கரவாத தாக்குதலோ இல்லை என்றும் தெரிவித்துள்ளார், மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த ஜனாதிபதி Miguel, பாதிக்கப்பட்டவர்கள் தீவிர சிகிச்சை வழங்கபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சரடோகா ஹோட்டலின் வெடிவிபத்தின் போது அருகில் இருந்த பள்ளிவளாகத்தில் 300 குழந்தைகள் வரை இருந்ததினால், இந்த விபத்தினால் பள்ளி குழந்தை ஒன்று உயிரிழந்து விட்டதாகவும், 15 குழந்தைகள் வரை படுகாயமடைந்து இருப்பதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், கியூபாவில் பல்வேறு ஹோட்டல்களுக்கு சேவைகளை வழங்கி வரும் ராணுவ நிறுவனமான Roberto Enrique Calzadilla, சரடோகா ஹோட்டலில் இன்னும் சில தினங்களில் தனது சேவையை தொடரும் என தெவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: லொறி டிரக்கில் ஒழிந்திருந்த 100 புலம்பெயர்ந்தவர்கள்: தப்பி ஓடியவர்களை மடக்கி பிடித்த பொலிசார்!
மேலும் இந்த விபத்தானது, ஹோட்டல் தொழிலாளர்கள் எரிவாயு இணைப்பை பழுதுபார்த்து, அதன் ஏரிவாயு சப்ளையை திரும்பிபெற வேலை செய்து கொண்டிருந்த போது இந்த விபத்து எற்பட்டு இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.