முதலையுடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும்! புடின் மீது போரிஸ் ஜான்சன் காட்டம்
ரஷ்ய அதிபர் புடினை நம்ப முடியாததால் உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது என பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
புடினை நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தைக்கு அணுகுவதில் முற்றிலும் தோல்வியடைந்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
ரஷ்ய ஜனாதிபதி பேச்சு வார்த்தைகளில் செல்வாக்கு செலுத்துவதற்காக பிராந்தியங்களை கைப்பற்ற முற்படுகிறார் என்பது தெளிவாகிறது.
இதற்காக உக்ரைன் தலைநகர் கீவ் மீது மற்றொரு தாக்குதலை கூட அவர் முன்னெடுப்பார்.
உக்ரைனுக்கான உதவி பொருட்களுடன் வந்த விமானத்தை ஏற்க மறுத்த இந்தியா! கோபத்தில் ஜப்பான்
முதலையின் வாயில் உங்கள் கால் சிக்கியிருக்கும் போது அத்துடன் எப்படி பேச்சுவார்த்தை நடத்த முடியும்? இதுதான் உக்ரேனியர்கள் எதிர்கொள்ளும் சிரமம்.
ரஷ்ய அதிபர் புடின் நம்ப தகுந்த நபர் அல்ல என பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.