உக்ரைனுக்கான உதவி பொருட்களுடன் வந்த விமானத்தை ஏற்க மறுத்த இந்தியா! கோபத்தில் ஜப்பான்
உக்ரைனுக்கான உதவி பொருட்களை ஏற்றி வந்த ஜப்பான் தற்காப்புப் படையின் விமானத்தை இந்தியா ஏற்க மறுத்ததாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜப்பான் விமானம் உக்ரைனுக்கான உதவியை போலந்து மற்றும் ருமேனியாவுக்கு வழங்க இருந்தது, அதே நேரத்தில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை உதவி பொருட்களை மாற்றும் புள்ளிகளாக இருந்திருக்க வேண்டும்.
மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணைய அலுவலகத்துடன் இந்த விமானம் ஒருங்கிணைக்கப்பட்டது என்பதை ஜப்பானின் kyodo செய்தி நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
ஸ்வீடன் மற்றும் பின்லாந்துக்கு ரஷ்யா பகிரங்க எச்சரிக்கை
விமானத்தின் ஆரம்ப கட்ட பணிகளின் போது இந்தியா இதற்கு ஒப்புக்கொண்டது. ஆனால், புதன்கிழமை ஒருக்கிணைப்பில் குறைப்பாடு இருப்பதாக கூறி விமானத்தை ஏற்க மறுத்துவிட்டது என kyodo செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வரும் ரஷ்ய மீது பொருளாதார தடை விதிப்பதில் மேற்கத்திய நாடுகளுடன் ஜப்பான் இணைந்துள்ளது.
அதுமட்டுமின்றி உக்ரைனுக்கான உதவிகளையும் ஜப்பான் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.