நீங்கள் இந்த திதியில் தான் பிறந்தீர்களா? அப்போ நீங்க இப்படி தான் எப்பவும் இருப்பீங்க
சந்திரனின் நகர்வை பொறுத்து திதிகள் காணப்படுகின்றது.
ஒரு மாதத்தில் சந்திரனின் 14 நாட்களில் வளர்பிறை திதியும், 14 நாட்கள் தேய்பிறை திதியும் ஏற்படுகின்றது. மற்றைய இரண்டு நாட்கள் ஒன்று அமாவாசை மற்றையது பௌர்ணமி ஆகும்.
இப்படி ஒவ்வொருவருக்கும் திதிகள் மாறி மாறி இருக்கும். அதில் ஒரு சிலருக்கு நல்ல பலன்களும் தீய பலன்களும் அமையக்கூடும்.
ஆகவே இந்த பதிவின் மூலம் எந்த திதியில் பிறந்தவர்கள் எந்த குணாதிசயங்களுடன் காணப்படுவார்கள் என தெரிந்துக்கொள்வோம்.
பிரதமை
பிரதமை திதியில் பிறந்தவர்கள் எதையும் அழமாக சிந்தித்து செயல்படுபவர்களாக இருப்பார்கள்.
துவிதியை
துவிதியை திதியில் பிறந்தவர்கள் உண்மைகளை மற்றும் பேசுவார்கள். அவர்கள் பொய் பேசுவது அரிதாகவே காணப்படும்.
திருதியை
திருதியை திதியில் பிறந்தவர்கள் தாங்கள் நினைக்கும் காரியத்தை தானே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என நினைப்பார்கள்.
சதுர்த்தி
சதுர்த்தியில் பிறந்தவர்கள் கூடுதலாக மந்திர சக்தியில் விருப்பம் உள்ளவர்களாகவும் அதில் அதிக ஈடுபாடு கொண்டவராகவும் காணப்படுவார்கள்.
பஞ்சமி
பஞ்சமி திதியில் பிறந்தவர்கள் பொதுவாகவே பொன் மீது அதிக நாட்டம் உடையவராக இருப்பார்கள்.
சஷ்டி
சஷ்டி திதியில் பிறந்தவர்கள் செல்வந்தராக இருப்பார்கள்.
சப்தமி
சப்தமி திதியில் பிறந்தவர்கள் மற்றவர்கள் மீது அக்கறை செலுத்துவார்கள்.
ஏகாதசி
ஏகாதசி திதியில் பிறந்தவர்கள் புது பது தொழில்கள் செய்ய வேண்டும் என்று ஆர்வமாக இருப்பார்கள்.
திரயோதசி
திரயோதசி திதியில் பிறந்தவர்கள் தங்களது உறவினர்களிடம் அதிகம் பேசாமல் தனித்து வாழ நினைப்பார்கள்.
பௌர்ணமி
பௌர்ணமி திதியில் பிறந்தவர்கள் தெளிவான ஒரு சிந்தனையை கொண்டவராக இருப்பார்கள்.
அமாவாசை
அமாவாசை திதியில் பிறந்தவர்கள் தனது அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள நினைப்பார்கள்.