நகை விற்ற பணத்தில் படகு வாங்கி.., 45 நாட்களில் ரூ.30 கோடி சம்பாதித்த நபர்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளாவில் நபர் ஒருவர் 45 நாட்களில் ரூ.30 கோடி சம்பாதித்துள்ளார்.
யார் அவர்?
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கடந்த ஜனவரி மாதம் 13-ம் திகதி தொடங்கிய ஆன்மீக திருவிழாவான மகா கும்பமேளா பிப்ரவரி மாதம் 26-ம் திகதி நிறைவடைந்தது. இந்த கும்பமேளாவில் மொத்தம் 66 கோடிக்கும் அதிகமான மக்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிகழ்வில் பலரது வாழ்க்கை நிலை மாறியுள்ளது. அப்படி ஒருவரின் கதையை தான் பார்க்க போகிறோம்.
அரைல் பகுதியைச் சேர்ந்தவர் பிந்து மஹ்ரா. இவரது குடும்பம் தலைமுறை தலைமுறையாக படகு தொழில் செய்து வருகிறது.
இந்நிலையில் கும்பமேளாவுக்காக தனது படகின் எண்ணிக்கையை இருமடங்காக மாற்ற வேண்டும் என்று பிந்து மஹ்ரா எண்ணினார்.
இதற்காக நகைகளை விற்று படகு வாங்க வேண்டுமா என்று முதலில் யோசித்தனர். ஆனால், லட்சக்கணக்கான மக்கள் வரும் இடத்திற்கு இது அவசியம் என்று படகு வாங்கினர்.
அப்போது அவருடைய படகில் ஆயிரக்கணக்கான மக்கள் சென்றனர். இது தான் அவருடைய வாழ்க்கையையே மாற்றி அமைத்தது. இதன் மூலம் 45 நாட்களில் ரூ. 30 கோடி வருமானம் ஈட்டினார்.
இதுகுறித்து பிந்து மஹ்ராவின் தாயார் சுக்லாவதி தேவி கூறுகையில், " எனது கணவர் இறந்த பிறகு எனது குடும்பம் பொருளாதார சவால்களை சந்தித்தது. இப்போது நாங்கள் இந்த வெற்றியால் பொருளாதார ரீதியாக பாதுகாப்பாக இருக்கிறோம்" என்றார்.
உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சட்டமன்றத்தில் இது குறித்து பேசுகையில் பிந்துவின் கதை தேசிய அளவில் புகழ்பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |