சொதப்பிய பூரன், பொல்லார்டு! சிக்ஸர்களை பறக்கவிட்டு வெற்றிபெற வைத்த ட்ரெண்ட் போல்ட் (வீடியோ)
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் MI நியூயார்க் அணி, 2 விக்கெட் வித்தியாசத்தில் சான் பிரான்சிஸ்கோ யூனிகார்ன்ஸ் அணியை வீழ்த்தியது.
சேவியர் பார்ட்லெட் ருத்ர தாண்டவம்
டல்லாஸில் நடந்த எலிமினேட்டர் போட்டியில் சான் பிரான்சிஸ்கோ அணி முதலில் துடுப்பாடியது. போல்ட், கென்ஜிகே பந்துவீச்சில் தொடக்க விக்கெட்டுகள் சரிந்தன.
Xavier Bartlett strikes back for SFU ☄️ pic.twitter.com/MKJyQ70PqE
— Cognizant Major League Cricket (@MLCricket) July 10, 2025
கூப்பர் கொனோலி 23 (19) ஓட்டங்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் சேவியர் பார்ட்லெட் சிக்ஸர்களை பறக்கவிட்டு, 24 பந்துகளில் 44 ஓட்டங்கள் விளாசினார். இதில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கும். ருஷில் உகர்கர் 3 விக்கெட்டுகளும், போல்ட் மற்றும் கென்ஜிகே தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய MI நியூயார்க் அணியில் டி காக் 33 (24) ஓட்டங்களும், மோனக் படேல் 33 (32) ஓட்டங்களும் எடுத்தனர்.
ட்ரெண்ட் போல்ட் மிரட்டல்
அடுத்து அணித்தலைவர் நிக்கோலஸ் பூரன் 1 ரன்னில் வெளியேற, பொல்லார்ட் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் வந்த வீரர்களும் ஹசன் கான் (Hassan Khan) பந்துவீச்சில் அடுத்தடுத்து வெளியேற, ட்ரெண்ட் போல்ட் (Trent Boult) அதிரடி காட்டினார்.
அவர் 13 பந்துகளில் 2 சிக்ஸர்களுடன் 22 ஓட்டங்கள் விளாச, MI நியூயார்க் 19.3 ஓவரில் 132 ஓட்டங்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. ஹசன் கான் 4 விக்கெட்டுகளும், மேத்யூ ஷார்ட் 3 விக்கெட்டுகளும், பார்ட்லெட் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
TRENT BOULT - THE NEW FINISHER OF MI NEW YORK IN MLC 2025....!!!!!
— MANU. (@IMManu_18) July 10, 2025
- 22*(13) in Eliminator vs San Francisco Unicorns.!!!!!
pic.twitter.com/7h349jJ50A
Wake up Fam! Boulty just dropped a banger with the bat 😎⚡#OneFamily #MINewYork #MLC #SFUvMINY pic.twitter.com/KYLjBy92ZH
— MI New York (@MINYCricket) July 10, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |