பாபர் அசாம் இல்லை: முக்கிய வீரர்களை புறக்கணித்து பாகிஸ்தான் அணி அறிவிப்பு
வங்காளதேசத்திற்கு எதிரான டி20 போட்டிக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி 20ஆம் திகதி நடக்கிறது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி 22ஆம் திகதியும், கடைசி டி20 போட்டி 24ஆம் திகதியும் நடைபெற உள்ளது.
இதற்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாபர் அசாம் (Babar Azam), முகமது ரிஸ்வான் (Mohammad Rizwan), ஷகீன் ஷா அப்ரிடி ஆகிய முக்கிய வீரர்கள் இதில் இடம்பெறவில்லை.
ஆல்ரவுண்டர் வீரர் சல்மான் அலி ஆகா அணிக்கு தலைமை தாங்குகிறார். பஹார் ஜமான், முகமது ஹரிஸ் ஆகிய இரு அனுபவ வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.
அணி விபரம்:
- சல்மான் அலி ஆகா (அணித்தலைவர்)
- அப்ரார் அகமது
- அகமது டேனியல்
- பஹீம் அஷ்ரப்
- பஹர் ஜமான்
- ஹசன் நவாஸ்
- ஹுசைன் தலாத்
- குஷ்தில் ஷா
- முகமது அப்பாஸ் அப்ரிடி
- முகமது ஹாரிஸ்
- முகமது நவாஸ்
- ஸாஹிப்சாதா பர்ஹான்
- சைம் அயூப்
- சல்மான் மிர்ஸா
- சுஃப்யான் மொஹிம்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |