வடகொரிய நபரை வலைவீசித் தேடும் மூன்று நாடுகள்: ரூ 84 கோடி வெகுமதி அறிவிப்பு
இராணுவ மற்றும் அணுசக்தி ரகசியங்களை திருடும் திட்டத்துடன் இணையமூடாக உளவு வேலையில் ஈடுபடும் வடகொரிய குழு ஒன்றிற்கு எதிராக மூன்று நாடுகள் களமிறங்கியுள்ளது.
கூட்டாக எச்சரிக்கை
Andariel என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த குழுவுக்கு எதிராக பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் தென் கொரிய நாடுகள் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது.
குறித்த குழுவானது உலகெங்கிலும் உள்ள அமைப்புகளை சமரசம் செய்து வகைப்படுத்தப்பட்ட தொழில்நுட்பத் தகவல் மற்றும் அறிவுசார் தரவுகளை கொள்ளையிட முயற்சி செய்து வருவதாக பிரித்தானியாவின் NCSC அமைப்பு கண்டறிந்துள்ளது.
இந்த நிலையில் NCSC அமைப்பு, அமெரிக்காவின் FBI மற்றும் தென் கொரியாவின் உளவுத்துறை ஆகியவை கூட்டாக எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், Andariel அமைப்பின் நடவடிக்கைகள் தொடர்பிலும் ஆலோசனை குறிப்புகளை வழங்கியுள்ளது.
தேடப்படும் குற்றவாளி
அத்துடன், Andariel அமைப்பின் உறுப்பினர்கள் தொடர்பில் தகவல் அளிப்பவர்களுக்கு 10 மில்லியன் டொலர் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ 84 கோடி வெகுமதி அளிக்கவும் எஞ்சிய இரு நாடுகள் சார்பில் அமெரிக்கா முன்வந்துள்ளது.
மட்டுமின்றி, Andariel அமைப்பின் முக்கிய நபராக கருதப்படும் Rim Jong Hyok என்பவரை தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் அமெரிக்கா இணைத்துள்ளது. 2009ல் இருந்தே Andariel அமைப்பு செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்பானது பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்கள், இராணுவ அமைப்புகள் மற்றும் அரசாங்கங்களை உளவு பார்ப்பதற்காக இலக்கு வைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. மேலும் வடகொரியாவின் RGB என்ற அமைப்பின் ஒரு பகுதி இந்த Andariel குழு என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |