மார்பில் பலமாக தாக்கிய பந்து! அலறி துடித்த வீரர்... ரசிகர்களை பதறவைத்த வீடியோ
ஐதராபாத் அணி வீரர் பூரன் அடித்த பந்து மார்பில் பலமாக தாக்கியதால் டெல்லி வீரர் கலீல் அஹ்மது அலறி துடித்தது ரசிகர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. டெல்லி அணி நிர்ணயித்த 208 ஓட்டங்களை இலக்கை நோக்கி ஐதராபாத் அணி விளையாடியது.
தொடக்கத்தில் விக்கெட்டுகள் வீழ்ந்த நிலையில், நிக்கோலஸ் பூரன் அதிரடியாக சிக்ஸர்களை பறக்கவிட்டுக் கொண்டிருந்தார். ஆட்டத்தின் 13வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் கலீல் அகமது வீசினார்.
அப்போது பூரன் பந்து அதிவேகத்தில் வந்து, கலீல் அகமது சுதாரிப்பதற்குள் அவரது மார்பில் பலமாக தாக்கியது. இதனால் ஏற்பட்ட வலியால் அவர் அலறித் துடித்தார். இந்த சம்பவத்தால் மைதானத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
— Ankit Jit Singh (@JitAnkit) May 5, 2022
எனினும் கலீல் அகமது மீதமுள்ள பந்துகளை வீசி ஓவரை முடித்தார்.
சிறப்பாக பந்துவீசிய கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி, 30 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.