பாரிஸ் ஒலிம்பிக் 2024: 46வது நொடியில் போட்டியில் இருந்து கண்ணீருடன் விலகிய குத்துச்சண்டை வீராங்கனை!
முன்னதாக பாலின தகுதி தேர்வில் தோல்வியுற்ற எதிராளியுடன் சண்டையிட்ட இத்தாலிய குத்துச்சண்டை வீராங்கனை சிறிது நேரத்திலேயே போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகிய குத்துச்சண்டை வீராங்கனை
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2024 ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இன்று 66 கிலோ எடை பிரிவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியின் போது, இத்தாலிய வீராங்கனை முதல் சுற்றின் 46வது நொடியிலேயே போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
[
கடந்த முறை உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பாலின தகுதி தேர்வில் தோல்வியுற்ற அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனை இமானே கெலிஃபை(Imane Khelif) எதிர்த்து சண்டையிட்ட இத்தாலிய வீராங்கனை ஏஞ்சலா கரினி (Angela Carini) தனது மூக்கில் ஏற்பட்ட தாங்க முடியாத வலியின் காரணமாக தன்னுடைய ஒலிம்பிக் கனவை முடித்து கொள்வதாக போட்டிக்கு நடுவே அறிவித்து கண்ணீருடன் வெளியேறினார்.
வெறும் 46 நொடிகள் மட்டுமே நடைபெற்ற இந்த போட்டிக்கு பிறகு, ஏஞ்சலா கரினி “இது போன்ற குத்துதலை இதுவரை நான் உணர்ந்தது இல்லை என தெரிவித்துள்ளார்.”
மேலும் தான் எந்தவொரு தீர்ப்பு வழங்கவும் இங்கு வரவில்லை, ஒரு தடகள வீரராக இப்படி இருந்தால் அது எந்த வகையிலும் சரியல்ல, இருப்பினும் எனது உடல் நலத்தின் பாதுகாப்பு கருதி வெளியேறுவதாக ஏஞ்சலா கரினி அறிவித்துள்ளார்.
இதன் மூலம் எதிராளியான இமானே கெலிஃப் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார், இருப்பினும் கடந்த முறையை நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பாலின தகுதி தேர்வில் தோல்வியடைந்த இரண்டு வீராங்கனைகளில் ஒருவரான இமானே கெலிஃப் இந்த முறை பாரிஸ் ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்டு இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Paris Olympics, Angela Carini, Imane Khelif, world championships