கைப்பற்றப்பட்ட 86% காசா பகுதி:இஸ்ரேல் உத்தரவு தொடர்பில் ஐ.நா முக்கிய தகவல்
கைப்பற்றப்பட்ட 86 சதவீத காசா பகுதி தற்போது இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவின் கீழ் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபை தகவல்
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர்களுக்கு இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட ஒரு வருடத்தை நெருங்க உள்ளது. காசாவின் பெரும்பாலான உள்கட்டமைப்புகளை இஸ்ரேலிய ராணுவம் முற்றிலுமாக சிதைத்துள்ளது.
இந்நிலையில் கைப்பற்றப்பட்ட 86% சதவீத காசா பகுதிகள் தற்போது இஸ்ரேலின் வெளியேற்ற உத்தரவின் கீழ் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் தாக்குதல் மற்றும் இடமாற்றத்தின் போது திங்கட்கிழமை கூடுதலாக 33 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய ராணுவம் புதிய வெளியேற்ற உத்தரவை பிறப்பித்த பிறகு, ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்கள் Bureij மற்றும் Nuseirat அகதிகள் முகாமில் இருந்து திங்கட்கிழமை வெளியேறி வருகின்றனர்.
இது தொடர்பாக பேசிய பாலஸ்தீனர் ஒருவர், எங்கள் வாழ்க்கை துண்டு துண்டாக உள்ளது, தங்களிடம் ஒன்றுமே இல்லை, கடவுளை தவிர வேறு யாரும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |