மூளையில் ரத்தக்கசிவு... கோமாவில் 221 நாட்கள்: பிரபல குத்துச்சண்டை வீரரின் தற்போதைய நிலை
தோல்வியே கண்டிராத பிரபல குத்துச்சண்டை வீரர் ஒருவர் மூளையில் ஏற்பட்ட கடுமையான காயத்தால் 221 நாட்கள் கோமாவில் படுத்த நிலையில், தற்போது மீண்டு வருவதாக தகவல் வெளியிட்டுள்ளார்.
தலையின் பின்புறத்தில்
அமெரிக்காவின் இளம் குத்துச்சண்டை வீரரான பிரிச்சார்ட் கோலன் கடந்த 2015ல் டெரல் வில்லியம்ஸ் என்பவருக்கு எதிரான போட்டியின் போது வாழ்க்கையையே புரட்டிப்போடும் காயங்களுக்கு உள்ளானார்.
Image: Mirror
போட்டி முழுவதுமே வில்லியம்ஸ் கோலனின் தலையின் பின்புறத்தில் பலமுறை குத்து விட்டார். இந்த நிலையில் மயக்கம் ஏற்படுவதாக கூறிய கோலன், திடீரென்று சுயநினைவின்றி சரிந்தார்.
உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில் அவருக்கு மூளையில் காயம் ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து சுமார் 221 நாட்கள் கோமா நிலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்.
அனைத்திலும் வெற்றி
அத்துடன் அவரது மூளை வீக்கத்தைக் குறைக்கவும், ரத்தக்கசிவை அகற்றவும் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது 31 வயதான கோலன் தொடர்ந்து தாயாரின் கவனிப்பில் உள்ளார்.
@getty
8 ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்து வரும் கோலன் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார் என்றே கூறப்படுகிறது. பிரிச்சார்ட் கோலன் இதுவரை 16 போட்டிகளில் பங்கேற்று, அனைத்திலும் வெற்றி கண்டுள்ளார்.
கடந்த 2017 இல் ரிங்சைடு மருத்துவர் மற்றும் போட்டி முன்னெடுத்தவர்களிடமிருந்து நஷ்டஈடு கோரி கோலனின் பெற்றோர்கள் வழக்கு தொடர்ந்தனர். இருப்பினும், 41 மில்லியன் பவுண்டுகள் வழக்கு இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |