குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் ஃபோர்மேன் மரணம்., மைக் டைசன் அஞ்சலி
முன்னாள் ஹெவிவெயிட் குத்துச்சண்டை ஜாம்பவான் ஜார்ஜ் ஃபோர்மேன் (76) காலமானார்.
மார்ச் 21, 2025, வெள்ளிக்கிழமை, குடும்பத்தினருடன் அமைதியாக உறங்கிக்கொண்டே அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
2 முறை உலக சாம்பியன்
1968 ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற அவர், 1973ல் ஜோ ஃப்ரேசியரை வீழ்த்தி தனது முதல் உலக ஹெவிவெயிட் பட்டத்தை கைப்பற்றினார். ஆனால், 1974ல் நிகழ்ந்த "Rumble In The Jungle" என்ற சரித்திரப்புகழ் பெற்ற போட்டியில் முகம்மது அலிக்கு எதிராக தோல்வி அடைந்தார்.
உலகின் வயதான ஹெவிவெயிட் சாம்பியன்
1994-ல் 45 வயதில் மைக்கேல் மூரரை வீழ்த்தி, உலக சாம்பியன் பட்டத்தை மீண்டும் கைப்பற்றினார். இதன் மூலம், உலகின் வயதான ஹெவிவெயிட் சாம்பியனாக புதிய சாதனை படைத்தார்.
மைக் டைசன் அஞ்சலி
பாக்சிங் உலகமே அவரது மறைவுக்கு இரங்கல்களை தெரிவித்துள்ளது. மைக் டைசன், ஜேக் பால், NBA நாயகன் மேஜிக் ஜான்சன் உள்ளிட்ட பிரபலங்கள் அவரை புகழ்ந்தனர்.
முகம்மது அலியின் பேரன் நிக்கோ அலி வால்ஷ் "கடைசியாக இருந்த தெய்வீக வீரர்களில் ஒருவர் சென்றுவிட்டார்" என்று தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |