உணவு ஊட்டியபோது உயிரிழந்த குழந்தை! அதிர்ச்சியில் உறைந்த குடும்பம்..என்ன நடந்தது?
தமிழக மாவட்டம் திருச்சியில் மூன்று வயது ஆண் குழந்தை உணவு ஊட்டியபோது, மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
மூச்சு திணறல்
திருச்சி மாவட்டம் பகவதிபுரத்தைச் சேர்ந்த தம்பதி கார்த்திக் (35), தாரணி (30). இவர்களது 3 வயது மகன் சைலேஷ். கர்ப்பமாக இருந்த தாரணி பிரசவத்திற்காக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கணவர் கார்த்திக் அவரின் உடன் இருந்து கவனித்து வந்துள்ளார். இதன் காரணமாக தாத்தா, பாட்டியின் பராமரிப்பில் குழந்தை சைலேஷ் இருந்துள்ளது.
இந்நிலையில், கார்த்திக்கின் தங்கை குழந்தைக்கு உணவு ஊட்டியதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதிர்ச்சி
அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூற அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்து திருவெறும்பூர் பொலிஸார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உணவு ஊட்டியபோது குழந்தை மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |