ஜிப்லைனில் 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த 6 வயது சிறுவன்: வைரலாகும் வீடியோ காட்சி
மெக்சிகோவில் சுற்றுலா பூங்கா ஒன்றில் உள்ள ஜிப்லைனின் 40 அடி உயரத்தில் இருந்து ஆறு வயது சிறுவன் ஒருவன் கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
40 அடி பள்ளத்தில் விழுந்த சிறுவன்
மெக்சிகோவின் மாண்டேரியில்(Monterrey) உள்ள பார்க் ஃபண்டிடோராவின் அமேசானியன் எக்ஸ்பெடிஷனின்(Parque Fundidora's Amazonian Expedition) ஜிப்லைனில் சவாரி செய்த 6 வயது சிறுவன் திடீரென கம்பி அறுந்து கீழே விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜூன் 25ம் திகதி நடைபெற்ற இந்த சம்பவத்தில், 40 அடி உயரத்தில் ஜிப்லைனில் இருந்து கீழே விழுந்த சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
?? • A six-year-old boy falls from a height of 12 meters while on a ropes rack at Fundidora Park in Monterrey, Mexico pic.twitter.com/DAysWyikiA
— Around the world (@1Around_theworl) June 26, 2023
செயற்கை நீச்சல் குளத்தில் விழுந்த சிறுவன்
ஜிப்லைனில் இருந்து கம்பி அறுந்து கீழே விழுந்த சிறுவன், பூங்காவில் இருந்த செயற்கை குளத்தில் விழுந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் பாக்ஸ் நியூஸ் வெளியிட்ட தகவலின் படி, நீச்சல் குளத்திற்கு அருகில் நின்ற சீசர் என்ற சுற்றுலா பயணி ஒருவர் உடனடியாக நீச்சல் குளத்துக்குள் குதித்து சிறுவனை காப்பாற்றினார்.
இதில் சிறுவன் லேசான காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்காக உடனடியாக சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிறுவனின் பெற்றோர் வழங்கிய தகவலில், சிறுவன் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும், ஆனால் சிறிது மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |