மொத்த குடும்பத்தையும் கொன்றுவிட்டு சடலங்களுடன் நாட்கணக்கில் வசித்த 15 வயது சிறுவன்! அதிர்ச்சி காரணம்
ஸ்பெயினில் மொத்த குடும்பத்தையும் கொலை செய்துவிட்டு சடலங்களுடன் நாட்கணக்கில் 15 வயது சிறுவன் தங்கியிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அலிகாண்டேவில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்சேக் கிராமத்தில் தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
15 வயது பள்ளி மாணவன் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றது தொடர்பாக அவனது தாய் சத்தம் போட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வீட்டில் இருந்த வேட்டையாடும் துப்பாக்கியால் முதலில் தாயையும், பின்னர் தனது 10 வயது சகோதரரையும், தொடர்ந்து தனது தந்தையையும் அந்த சிறுவன் சுட்டுக் கொன்றுள்ளான். ஸ்பெயின் காவல்துறை தொடர்ந்து 3 நாட்கள் சடலங்களுடன் வீட்டில் அந்த சிறுவன் தனியாக இருந்துள்ளான்.
இந்த சம்பவம் குறித்து வெளியே யாருக்கும் தெரியவில்லை. 3 நாட்களுக்கு பிறகு அந்த வீட்டிற்கு சென்ற உறவுக்கார பெண்ணிடம் அந்த சிறுவன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளான்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றியதுடன் சிறுவனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.