12 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து தெருவில் வீசிச் சென்ற கொடூரம்! சிசிடிவி கமெராவில் பதிவான பரிதாப காட்சி
அமெரிக்காவில் 12 வயது சிறுவன் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தெருவில் வீசிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் மியாமி நகரின் Brownsville பகுதியில், கடந்த சனிக்கிழமை காலை உள்ளூர் நேரப்படி 2 மணியளவில் கருப்பு நிற கார் ஒன்றில் இருந்து சிறுவன் ஒருவன் தள்ளிவிடப்பட்டான்.
அதன் பின் அந்த சிறுவன் காயங்களுடன் தெருவில் நடந்து வர, அப்போது அங்கு சைக்கிளில் வந்த நபர் அவனை பின்னோக்கி வர, அதே போன்று சிறுவன் இரத்தக் காயங்களுடன் வருவதைக் கண்ட மற்றொரு நபர் சிறுவனுக்கு உதவ முன் வந்துள்ளார்.
அதன் படி அவர் உடனடியாக அவசர சிகிச்சை எண்ணை தொடர்பு கொண்டார். இதையடுத்து அங்கு வந்த பொலிசார் மற்றும் மருத்துவ குழுவினர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இது தொடர்பான சிசிசிடிவி காட்சிகள் அங்கிருக்கும் கமெராவில் பதிவாகியிருந்தது. அதில் இரத்தக் காயங்களுடன் வரும் சிறுவன், அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, திடீரென்று கீழே சுருண்டு விழுகிறார்.
அப்போது அவர் உடல் முழுவதும் இரத்த காயங்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. அங்கிருந்த நபர் ஒருவர் அவருக்கு தண்ணீர் கொடுத்த உதவ முயற்சிக்கிறார்.
அந்த சிறுவன் குறித்து பெயரை பொலிசார் வெளியிடவில்லை. ஆனால், இதற்கு காரணமான நபரை தேடி வருவதாகவும், அவனைப் பற்றி ஏதேனும் தகவல் உடனடியாக தெரிவிக்கும் படி பொலிசார் கூறினர்.
குறித்த சிறுவன் கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அதன் பின் அவன் தாக்கப்பட்டோ அல்லது சுடப்பட்டோ காரில் இருந்து வீச்சென்றுள்ளான் என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
