டிவியில் ஐபிஎல் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சிறுவன்
டிவியில் ஐபிஎல் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த இளைஞரை 13 வயது சிறுவன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் மரணம்
இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசம், மீரட்டில் உள்ள கஜூரி கிராமத்தில் 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் தனது தாத்தாவின் உரிமம் பெற்ற துப்பாக்கியை எடுத்துள்ளான்.
அதனை எடுத்துக்கொண்டு தனது பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளான். அந்த வீட்டில் முகமது கைஃப் என்ற இளைஞர் ஒருவர் தொலைக்காட்சியில் தனியாக ஐபிஎல் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அந்த இளைஞரை பார்த்து சிறுவன் துப்பாக்கியை நீட்டியுள்ளான். பின்னர், சிறுவனின் விரல் தவறுதலாக துப்பாக்கி டிரகரில் பட்டு இளைஞரின் மீது குண்டு பாய்ந்துள்ளது.
இதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து துப்பாக்கி சத்தத்தை கேட்ட பக்கத்து வீட்டினர் வந்த பார்த்த போது இளைஞர் உயிரிழந்து கிடந்துள்ளார்.
மேலும் சிறுவன் மயங்கிய நிலையிலும் இருந்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனும் மயக்கம் தெளிந்த பின்பு காவலில் எடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |