இணையத்தில் வந்த ஆணை... சாலையில் சென்ற பெண்ணை கொடூரமாக தாக்கிய இளைஞனின் பகீர் பின்னணி
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவரை கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கிவிட்டு மாயமான இளைஞர் தொடர்பில் பகீர் பின்னணி வெளியாகியுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் பகுதியிலேயே 17 வயதேயான இளைஞரால்; இந்தக் கொலைவெறி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்த நேரு காலனி பகுதியில் நடந்து சென்றுக் கொண்டிருந்தார் பெண்மணி ஒருவர்.
திடீரென்று அவர் முன்பு கத்தியுடன் பாய்ந்த அந்த 17 வயது இளைஞர், பெண்மணியை கொடூரமாக தாக்கியுள்ளார்.
இதில் கழுத்து மற்றும் உடல் பகுதியில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் சரிந்துள்ளார் அப்பெண்மணி.
இதனிடையே தாக்குதல் தொடர்பில் தகவல் அறிந்து சம்பவப்பகுதிக்கு வந்த பொலிசார், பெண்மணியை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் விசாரணையை முன்னெடுத்த பொலிசாருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.
தாக்குதலுக்கு முன்னர் அந்த இளைஞருக்கு இணைய பக்கத்தில் இருந்து மர்ம நபரால் ஆணை இடப்பட்டதாகவும், கொல், தற்கொலை செய்துகொள் அல்லது மாயமாகு என்பதே அந்த ஆணை எனவும் பொலிசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
தாக்குதல் நடத்திய பின்னர் மாயமான இளைஞர் தொடர்பில் பொலிசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அவர் விட்டுச் சென்ற மொபைல்போனை பரிசோதித்ததில், வன்முறை மற்றும் துன்புறுத்தல் தொடர்பான ஒரு குழுவில் அந்த இளைஞர் உறுப்பினர் என்பதும், அந்த குழுவில் இருந்து மர்ம நபர் ஒருவர் இட்ட ஆணையை ஏற்று, முகம் தெரியாத அந்த பெண்மணியை இளைஞர் தாக்கியதும் தெரிய வந்துள்ளது.
குற்றச்செயல்களை ஊக்குவிக்கும் ஒருவகை கும்பலின் பொறியில் அந்த இளைஞர் சிக்கியிருக்கலாம் எனவும்,
தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள அவர்கள் இட்ட ஆணையை அந்த இளைஞர் நிறைவேற்றியிருக்கலாம் எனவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.