காதல் தோல்வியால் மனமுடைந்து போன பெண்! காதலியின் தற்கொலையை வீடியோ காலில் ரசித்த காதலன்
திருவாரூர் மாவட்டத்தில் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்ட காதலியின் இறப்பை, வீடியோ காலில் ரசித்த இளைஞரது செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல் தோல்வியால் தற்கொலை
திருவாரூர் மாவட்டம் மருதூரை சேர்ந்த அர்ச்சனா(24) ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர் வடகாட்டை சேர்ந்த சத்யராஜ் என்ற இளைஞரை 2 வருடமாக காதலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சத்யராஜ்(26) வேறொரு பெண்ணை காதலிக்க ஆரம்பிக்க அந்த விடயம் அர்ச்சனாவிற்கு தெரியவந்துள்ளது. இதனால் அர்ச்சனா மிகவும் மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
@hindustantimes
இதனை தொடர்ந்து சத்யராஜுக்கும், அர்ச்சனாவிற்கு இடையே கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி காலை வழக்கம் போல் அர்ச்சனா வீட்டிலிருந்து கிளம்பி தோழியுடன் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
மதிய உணவு இடைவேளைக்கு செல்லவேண்டிய நேரத்திற்கு அரைமணி நேரம் முன்பே வயிறு வலிப்பதாக கூறிவிட்டு அர்ச்சனா மட்டும் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
@gettyimages
இதையடுத்து அர்ச்சனாவின் தோழி மதிய உணவு இடைவேளைக்காக வீட்டிற்கு சென்று பார்த்த போது அர்ச்சனா வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டு தொங்கியபடி இருந்துள்ளார்.
வீடியோ கால் செய்ய சொன்ன காதலன்
கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி, அர்ச்சனா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு 45 நிமிடம் சத்யராஜுடன் அவர் செல்போனில் பேசியுள்ளார். அந்த உரையாடலில் சத்யராஜ் நீ தொலைந்து விடு என்று கூறியதாகவும், வீடியோ காலில் வரும்படி வற்புறுத்தி உள்ளார்.
அதற்கு அர்ச்சனா தொலைந்து போக சொல்லிவிட்டு பிறகு வீடியோ கால் எதற்கு என்றும் கேட்டுள்ளார். தொடர்ந்து வீடியோ கால் வந்த சத்யராஜ் அர்ச்சனா தூக்குப் போடுவதை பார்த்து ரசித்துள்ளார்.
@gettyimages
மேலும், 'தூக்கு மாட்டுவதற்கு முன்பு எனக்கு டாட்டா காட்டி விட்டு மாட்டிக்கொள்' என்று சத்யராஜ் கூறியதாக காவல்துறையினர் அர்ச்சனாவின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, காவல்துறையினர் சத்யராஜ் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.
தனது காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை வீடியோ காலில் ரசித்த இளைஞரது செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.