Bradford சம்பவம்... இளம் தாயார் தொடர்பில் பொலிசாரிடம் சிக்கிய ஆசிய நாட்டவர்
பிராட்ஃபோர்ட் பகுதி மக்களை நடுங்கவைத்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சுமார் 180 மைல்கள் தொலைவில்
பிராட்ஃபோர்ட் பகுதியில், சனிக்கிழமை பட்டப்பகலில் 27 வயதான Kulsama Akter என்பவர் கத்தியால் தாக்கப்பட்டு மரணமடைந்தார். குல்சாமா அக்தர் தமது 5 மாத குழந்தையுடன் நடந்து சென்றுகொண்டிருந்த நிலையிலேயே திடீரென்று தாக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பொலிசார் தாக்குதலுக்கு காரணமான நபரை தீவிரமாகத் தேடத் தொடங்கினர். இந்த நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் இருந்து சுமார் 180 மைல்கள் தொலைவில் வைத்து, 25 வயதான Habibur Masum என்ற ஆசிய நாட்டவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மட்டுமின்றி, திங்களன்று 23 வயது இளைஞர் ஒருவரும் இந்த வழக்கு தொடர்பில் பொலிசாரிடம் சிக்கியுள்ளார். பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், குல்சாமா அக்தரின் 5 மாத குழந்தையின் தந்தை, கைதான Habibur Masum என்றே தெரிய வந்துள்ளது.
ஏற்கனவே அறிமுகமானவர்கள்
ஆனால் இருவரும் திருமணம் செய்து கொண்டார்களா என்பது உறுதி செய்யப்படவில்லை. மட்டுமின்றி, Habibur Masum-ன் பேஸ்புக் பக்கத்தில் அவர் திருமணமானவர் என்றே குறிப்பிட்டுள்ளார்.
குல்சாமா மற்றும் மஸும் தம்பதி பொலிசாருக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள் என்றே கூறப்படுகிறது. சனிக்கிழமை பகல் 3.21 மணிக்கு மஸும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளார் என்றே கூறப்படுகிறது.
சம்பவம் நடந்த போது நேரில் பார்த்தவர்கள் இந்த வழக்கு விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும் என்று பொலிஸ் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |