மூளையை உண்ணும் அமீபா! அமெரிக்காவில் ஒருவர் பலி: அறிகுறிகள், சிகிச்சை முறைகள் என்னென்ன?
நெக்லேரியா ஃபோலேரி எனும் மூளையை உண்ணும் அமீபா தாக்கியதில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மூளையை உண்ணும் அமீபா
அமெரிக்காவின் தெற்கு புளோரிடா பகுதியை சேர்ந்த ஒருவர் நெக்லேரியா ஃபோலேரி என்று அழைக்கப்படும் மூளையை உண்ணும் அமீபா தாக்கியதில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பிப்ரவரி 20ம் திகதி சார்லோட் கவுண்டியில் உள்ள தண்ணீர் குழாயில் மூக்கை கழுவும் போது சம்பந்தப்பட்ட நபருக்கு அமீபா தொற்று ஏற்பட்டது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
Cdc.gov
இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு தென் கொரிய நபர் ஒருவர், நெக்லேரியா ஃபோலேரி (Naegleria fowleri) அமீபா தாக்கியதில் உயிரிழந்தார் என்பது தெரியவந்துள்ளது.
இந்த நெக்லேரியா ஃபோலேரி அமீபா மத்திய நரம்பு மண்டலத்தை பாதிப்படைய வைக்கிறது, மேலும் முதன்மை அமீபிக் மெனிங்கோ என்செபாலிட்டிஸை (PAM) ஏற்படுத்துகிறது, இது மூளை திசுகளை சேதப்படுகிறது.
சூடான நன்னீர் சூழலில் காணப்படும் இந்த வகை அமீபாக்கள் மூக்கின் வழியாக சென்று மூளையை பாதிப்பதால் இவை மூளையை உண்ணும் அமீபா என்று அழைக்கப்படுகிறது.
Getty Images/pexels
நோய் அறிகுறிகள்
நெக்லேரியா ஃபோலேரி அமீபாவின் நோய் அறிகுறிகள், தண்ணீரில் வெளிப்பட்ட 1 முதல் 12 நாட்களுக்கு பிறகு, மேலும் நோய் அறிகுறிகள் தோன்றிய 1 முதல் 18 நாட்களுக்கு பிறகு பாதிக்கப்பட்டவர் உயிரிழக்கின்றனர்.
இதில் கடுமையான முன் தலைவலி, காய்ச்சல், குமட்டல், வாந்தி, கழுத்து விறைப்பு, வலிப்பு, மாயத்தோற்றம் மற்றும் கோமா ஆகியவை ஏற்படுகிறது.
சிகிச்சை முறை
ஆம்போடெரிசின் பி, அசித்ரோமைசின், ஃப்ளூகோனசோல், ரிஃபாம்பின், மில்டெஃபோசின் மற்றும் டெக்ஸாமெதாசோன் ஆகியவை முதன்மை அமீபிக் மெனிங்கோ என்செபாலிடிஸ் சிகிச்சைக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன.
நெக்லேரியா ஃபோலேரி எதிர்ப்பு செயல்பாட்டைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுவதால், நோயில் இருந்து தப்பிய நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகின்றன.