ஆடவர் கிரிக்கெட்டிற்கே சவால் விடுத்த 16 வயது வீராங்கனை! வைரல் வீடியோ
மகளிர் பிக் பாஷ் லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் வீராங்கனை ப்ரே செய்த கேட்ச் வைரலாகியுள்ளது.
கார்ட்னர் 5 விக்கெட்டுகள்
பெர்த்தின் W.A.C.A மைதானத்தில் நடந்த WBBL போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணிகள் மோதின.
SHE'S JUST 16!
— Weber Women's Big Bash League (@WBBL) November 9, 2025
Maitlan Brown's reaction tells the tale of a STUNNING catch from Caoimhe Bray 🤯 #WBBL11 pic.twitter.com/XNs4EbijGT
முதலில் ஆடிய பெர்த் அணி 109 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக மிகைலா ஹிங்க்லே 31 ஓட்டங்கள் எடுத்தார்.
அஷ்லே கார்ட்னர் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர் ஆடிய சிட்னி சிக்ஸர்ஸ் அணி 12.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 112 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. சோஃபியா டன்க்லே 61 (40) ஓட்டங்களும், எல்லிஸ் பெர்ரி 47 (37) ஓட்டங்களும் விளாசினர்.
ப்ரே மிரட்டல் கேட்ச்
இப்போட்டியில் மைட்லன் பிரவுன் வீசிய ஓவரில் ஏமி எட்கர் அடித்த ஷாட்டை கெய்ம்மே ப்ரே (Caoimhe Bray) அபாரமாக செயல்பட்டு கேட்ச் செய்தார்.
16 வயது வீராங்கனையான ப்ரேயின் கேட்சைப் பார்த்து வீராங்கனைகள் மற்றும் பார்வையாளர்கள் மிரண்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
That's how you win a cricket match. #WBBL11 pic.twitter.com/v4jnJfCSYK
— Weber Women's Big Bash League (@WBBL) November 9, 2025
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |