அழகிற்காக கொழுப்பு அறுவைச் சிகிச்சை: பிரேசில் பெண் மாடலுக்கு ஏற்பட்ட பரிதாபம்
பிரேசிலை சேர்ந்த பிட்னஸ் ஆர்வலர் ஒருவர் கொழுப்பு நீக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட போது 4 முறை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
பிட்னஸ் ஆர்வலர் லுவானா
பிரேசில் நாட்டை சேர்ந்த பிட்னஸ் ஆர்வலரான 29 வயது லுவானா ஆன்ட்ரே சமூக ஊடகங்களில் பிரபலமானவராக இருந்து வருகிறார்.
இவரை இன்ஸ்டாகிராமில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடரும் நிலையில், சமூக ஊடகங்களில் பிட்னஸ் தொடர்பான பல்வேறு வீடியோக்களை தொடர்ந்து லுவானா பதிவிட்டு வந்துள்ளார்.
இவர் தன்னுடைய அழகிற்காக தீவிரமான உடற்பயிற்சி மற்றும் தீவிர உணவு கட்டுப்பாட்டிலும் இருந்துள்ளார்.
மேலும் தன்னுடைய பிட்னஸுக்காக அறுவை சிகிச்சைகளையும் அவ்வப்போது லுவானா மேற்கொண்டு வந்துள்ளார்.
மாரடைப்பில் உயிரிழப்பு
இந்நிலையில் சமீபத்தில் லுவானா தனது முழங்காலில் உள்ள கொழுப்பை குறைப்பதற்காக லிப்போசக்ஷன் என்னும் அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளார்.
ஆனால் துரதிஷ்டவசமாக அறுவை சிகிச்சையின் போது லுவானாவிற்கு 4 முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
அறுவை சிகிச்சை முடிந்தும் அவர் சுயநினைவு திரும்பாததை தொடர்ந்து ஐசியூ-வுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஆனால் 4 முறை மாரடைப்பு ஏற்பட்டதால் பின்னர் லுவானா ஆன்ட்ரே பரிதாபமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |