203 ஓட்டங்கள் இலக்கு,13 ஓட்டங்களுக்கு சுருண்ட எதிரணி: 9 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரேசில் வீராங்கனை சாதனை
ஒரே டி20 போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி பிரேசில் கிரிக்கெட் வீராங்கனை லாரா கார்டோசோ உலக சாதனை படைத்துள்ளார்.
கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனை
போட்ஸ்வானாவில் BCA கலஹாரி மகளிர் டிர்20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் பிரேசில் மற்றும் லெசோதா அணிகள் மோதின.
முதலில் பேட்டிங் செய்த பிரேசில் அணி 20 ஓவர்கள் முடிவில் 202 ஓட்டங்கள் குவித்து இலக்கை நிர்ணயித்தது.

சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய லெசோதோ அணி வெறும் 6.2 ஓவர்கள் முடிவில் 13 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆகி மிக மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது.
இந்த ஆட்டத்தில் பந்துவீசிய பிரேசில் கிரிக்கெட் அணி வீராங்கனை லாரா கார்டோசோ(Laura Cardoso) 9 விக்கெட்டுகளை கைப்பற்றி உலக சாதனை படைத்துள்ளார்.
மேலும் 3 ஓவர்கள் வீசிய லாரா வெறும் 4 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்துள்ளார்.

அத்துடன் 2 வது ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டுகளையும் 4 வது ஓவரில் நான்கு விக்கெட்டுகளையும், 6 வது ஓவரில் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
மீதமிருந்த மற்றொரு விக்கெட்டை லாராவின் சக வீராங்கனையான மரியான் ஆர்டூர் கைப்பற்றியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |