கோபா அமெரிக்காவில் முதல் வெற்றியை பதிவு செய்த பிரேசில்! 4-1 என சரணடைந்த பராகுவே அணி
கோபா அமெரிக்கா 2024 தொடரின் இன்றைய போட்டியில், பிரேசில் அணி 4-1 என்ற கோல் கணக்கில் பராகுவே அணியை வென்றது.
வினிசியஸ் ஜூனியர் இரட்டை கோல்
Allegiant மைதானத்தில் நடந்த போட்டியில் பிரேசில் மற்றும் பராகுவே அணிகள் மோதின.
கோஸ்டாரிகா அணியுடனான போட்டி டிராவில் முடிந்ததால், பிரேசில் முதல் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் அதிரடி காட்டியது.
23 வயது இளம் வீரரான வினிசியஸ் ஜூனியர் பம்பரமாக சுழன்று ஆடினார். 35வது நிமிடத்தில் கோல் அடித்த அவர், 45+5வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்து மிரட்டினார்.
Yeah fair it was a nice goal from Omar Alderete pic.twitter.com/Pb28AxXBbE
— Roberto Rojas ???? (@RobertoRojas97) June 29, 2024
முதல் வெற்றி
இதற்கிடையில் பிரேசிலின் சவியோ (Savio) 43வது நிமிடத்தில் கோல் அடித்தார். இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் பராகுவே (Paraguay) அணிக்கு கோல் கிடைத்தது.
அந்த அணியின் ஓமர் அல்டெரெடே 48வது நிமிடத்தில் கோல் அடித்தார். பின்னர் பிரேசில் அணிக்கு (65வது நிமிடம்) பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.
அதனை சரியாக பயன்படுத்திக் கொண்ட லுகாஸ் பயூட்டா (Lucas Paqueta) கோலாக மாற்றினார். இறுதிவரை போராடிய பராகுவே அணியால் மேற்கொண்டு கோல் அடிக்க முடியாததால் பிரேசில் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
The 'Joga Bonito' is back ??
— beIN SPORTS USA (@beINSPORTSUSA) June 29, 2024
Brazil dazzle and defeat Paraguay ?? 4-1 to secure their first victory in the Copa América ?#beINSPORTS #Brazil #CopaAmerica #Vinicius pic.twitter.com/5fx2wQALxg
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |