பெனால்டி ஷாட்டை தடுத்த கோல்கீப்பர்: களத்திலேயே சுருண்டு விழுந்த உயிரிழந்த கால்பந்து வீரர்
கால்பந்து விளையாட்டின் போது பெனால்டி ஷாட்டை தடுக்க முயன்ற கோல்கீப்பர் களத்திலேயே சரிந்து விழுந்தார்.
களத்தில் உயிரிழந்த கோல் கீப்பர்
பிரேசிலில் கோல்கீப்பர் ஆன்டோனியோ எட்சன் டான்டோஸ் செளசா என்பவர் எதிரணி அடித்த பெனால்டி ஷாட்டை நெஞ்சால் தடுத்த நிலையில், களத்தில் களத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
பிக்சே என்ற செல்லப் பெயரால் அழைக்கப்படும் 34 வயது டான்டோஸ் செளசா, வடக்கு பிரேசிலின் பராவில் அமெச்சூர் புட்சல் போட்டியில் சிந்த் மோட்டோஸ் என்ற அணிக்காக விளையாடி வந்தார்.
பெனால்டி ஷாட்டை தடுத்து நிறுத்திய பிறகு சக வீரர்களுடன் உற்சாகமாக கொண்டாடிய டான்டோஸ் செளசா, அடுத்த சில நொடிகளில் சக வீரர்கள் வீரர்கள் மீதே மயங்கி விழுந்துள்ளார்.
பின்னர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட டான்டோஸ் செளசா, போகும் வழியிலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து பரா புட்சல் கால்பந்து சம்மேளனம், அஞ்சலி வெளியிட்டு இருப்பதோடு தொடரின் மீதமுள்ள போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |