விமானத்தில் அடித்துக் கொண்ட பெண் பயணிகள்: பின்னணியில் உள்ள காரணம்! வீடியோ
பிரேசில் விமானத்திற்குள் பெண்களுக்கு இடையே நடைபெற்ற பயங்கர மோதலில் கோல் ஏர்லைன்ஸ் விமானம் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
விமானத்தில் கூச்சல்
பிரேசிலில் நோக்க வியாழக்கிழமை பறக்க இருந்த கோல் ஏர்லைன்ஸ் விமானம் G31659ல் இரண்டு குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு இடையே நடைபெற்ற பயங்கரமான மோதலால் விமானம் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டது.
கோல் ஏர்லைன்ஸ் விமானம் G31659 விமானம் மத்திய அமெரிக்காவின் சால்வடாரில் இருந்து பிரேசிலின் சாவ் பாலோ நோக்கி செல்ல தயாரானது.
Massive brawl breaks out on airline flight to Brazil… over a window seat. pic.twitter.com/zTMZPYzzDy
— Mike Sington (@MikeSington) February 3, 2023
இந்நிலையில் விமானத்தில் இருந்த பெண்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் கூச்சலிட்டு, அடித்து, முடிகளை பிடித்து இழுத்து, ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொண்டனர்.
இதனால் விமானத்தில் பெரும் பதற்றம் நிலவியது, இதில் பெண் ஒருவரின் ஆடை விலகப்பட்ட நிலையில், அவர் தனது மார்பகங்களை கைகளால் மறைத்து கொள்ளும் நிலை ஏற்பட்டது.
விமான நிலைய அதிகாரிகள் கடுமையாக போராடியும், பெண்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையை உடனடியாக நிறுத்த முடியாததால், சண்டை நீண்ட நேரத்திற்கு நீடித்தது.
Twitter
இருக்கை மாற்றம்
இந்த சண்டையானது தாய் ஒருவர் தனது சிறப்பு தேவைகள் உள்ள குழந்தையுடன் இருக்கைகளை மாற்றி கொள்ள முடியுமா என்று மற்றொரு பயணியிடம் கேட்டதை தொடர்ந்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
அவரது கோரிக்கை மறுக்கப்பட்ட நிலையில், அவள் ஆத்திரமடைந்து இருக்கைகளை மாற்ற மறுத்த குடும்பத்தை தாக்கத் தொடங்கி உள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.
நீண்ட நேரம் நடைபெற்ற இந்த சண்டையில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் ஒருவரை ஒருவர் சரமாரியாக அடித்து கொண்டனர்.
Twitter
இறுதியில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வந்த விமான ஊழியர்கள் கலவரத்தில் ஈடுபட்ட 15 பேரை விமானத்தில் இருந்து வெளியேற்றினர்.
இதனால் விமானம் 2 மணி நேரம் தாமதமாகி பிரேசிலின் சாவ் பாலோ நோக்கி பறந்தது.