பிரேசிலில் குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்: 4 பேர் உயிரிழப்பு
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் ஹெலிகாப்டர் ஒன்று குடியிருப்பு பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்து
பிரேசிலின் சாவ் பாலோ மாகாணத்தில் ஏர் டாக்ஸி நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென ஹெலிகாப்டர் தனது கட்டுப்பாட்டை இழந்து விட்டது என்பதை உணர்ந்த விமானி, உடனடியாக ஹெலிகாப்டரை தரையிறக்க முயற்சித்துள்ளார்.
ஆனால் அதற்குள் ஹெலிகாப்டர் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது.
4 பேர் உயிரிழப்பு
ஹெலிகாப்டர் விபத்து குறித்து தகவலறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியை தீவிரப்படுத்தினர்.
எதிர்பாராத இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
Pixabay
அத்துடன் அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த 9 வாகனங்கள் சேதமடைந்துள்ளன. மேலும் வாகனங்களில் இருந்த பலர் காயமடைந்துள்ளனர்.
இதையடுத்து மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.