பிரபலமாவதற்காக இளம்பெண் செய்த மோசமான செயல்: பொலிசார் அதிரடி
சமூக ஊடகப் பிரபலமான இளம்பெண்ணொருவர், தன்னைப் பின்தொடர்வோர் எண்ணிக்கை அதிகமாகவேண்டும் என்பதற்காக தான் கடத்தப்பட்டதாக நாடகமாடியுள்ளார்.
இளம்பெண் செய்த மோசமான செயல்
பிரேசில் நாட்டவரான மோனிக்கி ஃப்ராகா (Monniky Fraga, 27), ஒரு சமூக ஊடகப் பிரபலம். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், ஃப்ராகாவையும் அவரது கணவரான லூகாஸையும் ஒரு கும்பல் கடத்திச் சென்றது.

ஃப்ராகாவின் கணவரை அடித்து நொறுக்கிய அந்த கும்பல், பெரும் தொகை ஒன்றைக் கொடுத்தால் மட்டுமே அவர்களை விடுவிப்பதாக மிரட்ட, 30 பொலிசார் இணைந்து ஆபரேஷன் ஒன்றை நடத்தி ஃப்ராகாவையும் அவரது கணவரையும் மீட்டார்கள்.
இந்நிலையில், பொலிசார் தற்போது ஃப்ராகாவை கைது செய்துள்ளார்கள்.
அதாவது, ஃப்ராகாவும் அவரது கணவரும் கடத்தப்பட்டது, அவரும் வேறு சிலரும் இணைந்து நடத்திய நாடகம் என தெரியவந்துள்ளதால், ஃப்ராகாவை பொலிசார் கைது செய்துள்ளார்கள்.
விடயம் என்னவென்றால், ஃப்ராகாவின் கணவரான லூகாஸ் உண்மையாகவே தாங்கள் கடத்தப்பட்டதாக இன்னமும் நம்பிக்கொண்டிருக்கிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |