உலகக் கோப்பையில் தோற்ற பிரேசில்... விலைமாதர்களை நாடிய இருவர்: உயிருடன் கொளுத்தப்பட்ட கொடூரம்
கத்தார் உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் பிரேசில் அணி தோல்வியடைந்த சோகத்தில் விலைமாதர்களை நாடிய இரு ராணுவ வீரர்கள் உயிருடன் எரித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேமரூன் அணியிடம் தோல்வி
கத்தார் உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் பலம் பொருந்திய பிரேசில் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேமரூன் அணியிடம் தோல்வி கண்டது. டிசம்பர் 3ம் திகதி சனிக்கிழமை நடந்த இந்த ஆட்டத்தால் ஏமாற்றமடைந்த இரு ராணுவ வீரர்கள் மது போதையில் விலைமாதர்களை நாடியுள்ளனர்.
Image: Metrópoles
ஆனால் அவர்கள் இருவரின் உடல்களும் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. ராணுவ வீரர்கள் இருவரும் வார இறுதி நாளை உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுடன் கொண்டாடியுள்ளனர்.
உயிருடன் கொளுத்தியதாக பொலிஸ்
இந்த நிலையில், பிரேசில் அணி எதிர்பாராத வகையில் தோல்வியை சந்திக்க, மது போதையில் இருந்த இருவரும் விலைமாதர்களை நாடியுள்ளனர். ஆனால் அங்கிருந்து வெளியேறிய இருவரும் கொள்ளையர்களிடம் சிக்கியதாகவும், அவர்கள் கொடூரமாக சித்திரவதை செய்து உயிருடன் கொளுத்தியதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Image: Metrópoles
இவர்கள் இருவரும் பயணப்பட்ட வாகனத்திலேயே இருவரது கருகிய உடல்களும் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் திட்டமிடப்பட்டதா, அல்லது வாக்குவாதம் காரணமாக கொல்லப்பட்டார்களா? கொள்ளையர்களிடம் சிக்கியது எப்படி என்பது தொடர்பில் பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.
மேலும், திங்கட்கிழமை டி.என்.ஏ சோதனை மூலம் இருவரது உடலையும் அடையாளம் காணும் பொருட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். அடையாளம் காணப்பட்ட நிலையில், உறவினர்களுக்கு தகவல் தெரியப்படுத்தியுள்ளதாக உள்ளூர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Image: Metrópoles

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.