உலக கோப்பை கணிப்புகள் பொய்த்து போனது...கண்ணீர் விட்டு அழுத நெய்மர்! கனவை தவறவிட்ட பிரேசில்
உலக கோப்பை கனவை குரோஷிய அணியிடம் முன்னணி கால்பந்து அணியான பிரேசில் தவறவிட்டதை தொடர்ந்து, பெனால்டி ஷூட் அவுட்டை தவறவிட்ட பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் கண்ணீர் விட்டு கதறி அழுதது ரசிகர்களை கவலை அடைய வைத்துள்ளது.
காலிறுதியில் மோதிய பிரேசில்-குரோஷிய அணிகள்
2022ம் ஆண்டுக்கான கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று எஜுகேஷன் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற காலிறுதி போட்டியில் ஐந்து முறை சாம்பியன் அணியான பிரேசில், குரோஷிய அணியை எதிர்கொண்டது.
90 நிமிட ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் வெற்றியை தீர்மானிக்க ஆட்டத்தில் கூடுதல் நிமிடங்கள் சேர்க்கப்பட்டது.
இதனை பயன்படுத்தி கொண்ட பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் ஆட்டத்தின் 105 வது நிமிடத்தில் கோல் அடித்து பிரேசில் அணியை முன்னிலை படுத்தினார்.
⭐️ 77 international goals ⭐️
— FIFA World Cup (@FIFAWorldCup) December 9, 2022
?? Neymar joins Pele at the top of Brazil's male goalscoring charts! #FIFAWorldCup | #Qatar2022
நெய்மரின் இந்த கோல் மூலம் பிரேசில் அணிக்காக சர்வதேச போட்டியில் 77வது வீரர் என்ற பெருமையையும், பிரேசில் அணியின் சிறந்த வீரராக கருதப்படும் பிலே-வின் கோல் கணக்குடன் நெய்மர் இணைந்து கொண்டார்.
ஆட்டம் விறுவிறுப்படைய 117 வது நிமிடத்தில் குரோஷிய வீரர் புருனோ பெட்கோவிக் கோல் அடித்து அசத்தினார். ஆட்டத்தில் 30 நிமிடம் கூடுதலாக சேர்க்கப்பட்ட நிலையிலும், இறுதியில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் நின்றனர்.
இதனால் போட்டியின் வெற்றியை முடிவு செய்வதற்காக பெனால்டி ஷூட் அவுட் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
We're heading to penalties! ?#FIFAWorldCup | #HRV #BRA
— FIFA World Cup (@FIFAWorldCup) December 9, 2022
கண்ணீர் விட்டு கதறிய நெய்மர்
பெனால்டி ஷூட் அவுட் முறையில், இரு அணிகளும் ஐந்து வாய்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில், அதில் குரோஷிய அணி 4 வாய்ப்புகளை கச்சிதமாக பயன்படுத்தி கோல் அடித்தது.
முன்னணி பிரேசில் அணியோ 2 வாய்ப்புகளை மட்டுமே சரியாக பயன்படுத்தி கோல் அடித்ததால், காலிறுதியில் பெனால்டி ஷூட் அவுட் முறையின் மூலம் குரோஷிய அணியிடம் 4-2 என்ற வித்தியாசத்தில் பிரேசில் அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது.
Million heart brokes neymar crying ?? #FIFAWorldCup #Neymar pic.twitter.com/ENHlraFJJG
— Henry ?? (@shoaibA21211051) December 9, 2022
பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் தனக்கு வழங்கப்பட்ட பெனால்டி ஷூட் வாய்ப்பை இழந்துடன் மட்டுமல்லாமல் பிரேசில் அணியின் உலக கோப்பை கனவு சிதைந்ததை நினைத்து நெய்மர் கதறி அழுதது பிரேசில் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
அத்துடன் பிரேசில் அணி உலக கோப்பையை வெல்லும் என்று கணிப்புகள் வெளியாகி இருந்த நிலையில், அந்த கணிப்புகள் பொய்த்து போனது குறிப்பிடத்தக்கது.
The scenes! ???#FIFAWorldCup | #Qatar2022 pic.twitter.com/oqD5m1Icjx
— FIFA World Cup (@FIFAWorldCup) December 9, 2022