கால்பந்து உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பு யாருக்கு அதிகம்? வெளிவந்துள்ள முக்கிய கணிப்புகள்
2022ம் ஆண்டுக்கான கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணி கோப்பையை வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்று ஸ்போர்ட்ஸ் அனலிட்டிக்ஸ் நிறுவனங்கள் கணித்துள்ளது.
கோப்பையை நோக்கிய பயணம்
கத்தாரில் நடைபெற்று வரும் 2022ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிகளில் தற்போது லீக் சுற்றுகள் நடைபெற்று வருகின்றன. இந்த லீக் சுற்றுகளில் ஒவ்வொரு குழுவிலும் முன்னணி உள்ள முதல் இரண்டு அணிகள் சூப்பர் 16 சுற்றுக்கு தகுதி பெறும்.
இதுவரை நடைபெற்று முடிந்துள்ள லீக் சுற்றுக்களின் முடிவில் பிரான்ஸ், பிரேசில் மற்றும் போர்ச்சுக்கல் அணிகள் சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
2022 FIFA World Cup - 2022 FIFA உலகக் கோப்பை(The Sporting News)
இந்த சூப்பர் 16 சுற்றில் வெற்றி பெறும் 8 அணிகள் காலிறுதி சுற்றுக்கும், அதில் முன்னேறும் அணிகள் அரையிறுதி சுற்றுக்கும் தகுதி பெற்று கோப்பை நோக்கி முன்னேறும்.
இறுதியாக தகுதி பெற்ற கடைசி இரண்டு அணிகள் டிசம்பர் 18ம் திகதி நடைபெறும் இறுதி போட்டியில் பலப்பரீட்சை செய்து உலக கோப்பை யாருக்கு என்பதை முடிவு செய்வார்கள்.
2022 FIFA World Cup Teams- 2022 FIFA உலகக் கோப்பை அணிகள்(fifa.com)
கோப்பை யாருக்கு?
இந்நிலையில் Opta/Stats Perform என்ற ஸ்போர்ட்ஸ் அனலிட்டிக்ஸ் நிறுவனங்கள் உலக கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள அணிகளின் செயல்பாட்டு திறன் அடிப்படையில் எந்தெந்த அணிகள் உலகக் கோப்பையை வெல்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை பட்டியலிட்டுள்ளது.
இந்த பட்டியலின் அடிப்படையில் பிரேசில் தெளிவான முதன்மை இடத்தை பிடித்து கோப்பையை வெல்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும், அதனை தொடர்ந்து பிரான்ஸ், ஸ்பெயின், அர்ஜென்டினா ஆகிய நாடுகள் உள்ளன என்றும் தெரியவந்துள்ளது.
Sky News
அத்துடன் உலக கோப்பை போட்டியில் யார் வெல்வார்கள் என்பது எங்களுக்கு தெரியும், ஆனால் அந்த அணி எந்த வழியில் செல்வார்கள் என்பது வேண்டுமானால் வேறுபடலாம் என Opta/Stats Perform அறிவித்துள்ளன.
Sky News