சுவிட்சர்லாந்தை வீழ்த்தி சூப்பர் 16 சுற்றுக்கு முன்னேறிய பிரேசில்: நெய்மர் இல்லாத குறையை தீர்த்த காசெமிரோ
கத்தார் உலக கோப்பை போட்டியில் சுவிட்சர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பிரேசில் அணி சூப்பர் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
சுவிட்சர்லாந்தை வீழ்த்திய பிரேசில்
உலக கோப்பை கால்பந்து தொடரின் 9வது போட்டி நாளான இன்று சுவிட்சர்லாந்து மற்றும் பிரேசில் அணிகள் கத்தாரின் தோஹா மைதானத்தில் பலபரீட்சை செய்தனர்.
ஆட்டத்தின் முதல் 45 நிமிடங்களில் பிரேசில் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய இரண்டு அணிகளுமே கோல் அடிக்காததால் முதல் பாதி சமநிலையில் முடிந்தது.
fifa.com
பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர் இல்லாததே ஆட்டத்தில் சுறுசுறுப்பு ஏறாததற்கு காரணம் என்று ரசிகர்கள் சேர்வடைந்தனர்.
ஆட்டம் சமநிலையில் தான் முடிய போகிறது என அனைவரும் நினைத்த போது, நெய்மர் இல்லாத குறையை பிரேசில் அணியிடம் இருந்து போக்கும் விதமாக ஆட்டத்தின் 83 வது நிமிடத்தில் காசெமிரோ(CASEMIRO) கோல் அடித்து அசத்தினார்.
சூப்பர் 16 சுற்றுக்கு தகுதி
காசெமிரோ அடித்த கோல் மூலம் முன்னிலை பெற்ற பிரேசில் அணி ஆட்டத்தின் முடிவில் சுவிட்சர்லாந்து அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
? Brazil have booked their ticket to the Round of 16@adidasfootball | #FIFAWorldCup
— FIFA World Cup (@FIFAWorldCup) November 28, 2022
இதன்மூலம் கத்தார் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் அணிக்கு பிறகு சூப்பர் 16 சுற்றுக்கு இரண்டாவது அணியாக பிரேசில் அணி தகுதி பெற்றுள்ளது.
அத்துடன் கத்தார் உலக கோப்பை போட்டியில் இரண்டு லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற்ற அணி என்ற பெருமையையும் பிரேசில் அணி பெற்றுள்ளது.
5 முறை சாம்பியன்
கால்பந்து உலக கோப்பையில் 5 முறை சாம்பியனான பிரேசில் அணி தனது 6வது கோப்பைக்காக அதன் முதல் படியாக சூப்பர் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
???#FIFAWorldCup | #Qatar2022 pic.twitter.com/Q5wQsatvgR
— FIFA World Cup (@FIFAWorldCup) November 28, 2022
வலுவான அடித்தளம் மற்றும் உறுதியான வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ள பிரேசில் அணி நிச்சயமாக 6வது முறையும் கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.