மைதானத்தில் வலியால் துடித்த நெய்மர்: பிரேசில் அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மரின் கணுக்காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த காயத்தால் நெய்மர் அடுத்த இரண்டு போட்டிகளில் களமிறங்க மாட்டார் என்று பிரேசில் அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
பிரேசில் வெற்றி
2022ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியானது கத்தாரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Que Deus nos abençoe e nos proteja ???? pic.twitter.com/AWxskKBMoo
— Neymar Jr (@neymarjr) November 24, 2022
அந்த வகையில் இன்றைய போட்டியில் செர்பியா மற்றும் பிரேசில் அணிகள் பலப்பரீட்சை செய்தன, இந்த போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தி பிரேசில் அணி அசத்தான வெற்றியை பதிவு செய்துள்ளது.
நெய்மர் காலில் காயம்
செர்பியா உடனான இந்த லீக் போட்டியில் பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
ஆட்டத்தின் 80 நிமிடத்தில் பந்தை எதிர்கொண்ட போது எதிர்பாராத விதமாக நெய்மருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
Nenhuma pipocada: Neymar foi massacrado pelos beques vermelhos. Covardes e juiz cagão! pic.twitter.com/wqwkbBlnkn
— Milton Neves (@Miltonneves) November 25, 2022
இதையடுத்து அவர் உடனடியாக மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார், அத்துடன் அடுத்த 2 போட்டிகளில் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நெய்மர் விளையாட மாட்டார் என்றும் பிரேசில் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வரும் திங்கட்கிழமை ஸ்விட்சர்லாந்தை பிரேசில் அணி எதிர்கொள்ள இருக்கும் நிலையில், நட்சத்திர வீரர் நெய்மர் இல்லாதது பிரேசில் அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
He really wanted Neymar's shirt ? pic.twitter.com/bvLWnXjLtO
— B/R Football (@brfootball) November 24, 2022