2022ம் ஆண்டு கால்பந்து உலக கோப்பை: போட்டியை நடத்தும் கத்தார் அணி தொடரில் இருந்து வெளியேற்றம்
2022ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து தொடரில் இருந்து போட்டியை நடத்தும் கத்தார் கால்பந்து அணி வெளியேற்றப்பட்டுள்ளது.
அடுத்தடுத்து தோல்வி
கத்தார் 2022ம் ஆண்டின் உலக கோப்பை கால்பந்து தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது, இந்த தொடரின் முதல் போட்டியில் கத்தார் அணியும் ஈக்குவடார் அணியும் மோதின.
இந்த போட்டியில் கத்தார் கால்பந்து அணி ஈக்குவடார் அணியிடம் 0-2 என்ற கோல் கணக்கில் மிகவும் மோசமாக தோல்வியடைந்தது.
? | لقطات من مباراة منتخبنا الوطني ?? ومنتخب السنغال ?? #كلنا_العنابي #قطر2022 pic.twitter.com/ZWdKoElYYs
— الاتحاد القطري لكرة القدم ?? (@QFA) November 25, 2022
உலக கோப்பை வரலாற்றிலேயே போட்டியை நடத்தும் நாடு தனது முதல் போட்டியிலேயே தோல்வியடைந்தது இதுவே முதல் முறை.
இந்நிலையில் இன்று செனக்கல் அணிக்கு எதிராக நடைபெற்ற லீக் போட்டியிலும் கத்தார் அணி 1-3 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்துள்ளது.
தொடரில் இருந்து வெளியேறியது கத்தார்
உலக கோப்பை தொடரையே நடத்தும் கத்தார் அணியின் அடுத்தடுத்த தோல்வியால் தற்போது அந்த அணி தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
வரும் செவ்வாய்க்கிழமை நெதர்லாந்து அணிக்கு எதிராக கத்தார் அணி தனது 3வது லீக் போட்டியை விளையாட உள்ளது.
Can Senegal advance from Group A?#MGLQatar2022 | #FIFAWorldCup pic.twitter.com/zcRKhjfPP8
— ⬅️ #JoySportsZone ⏳️ (@JoySportsGH) November 25, 2022
நெதர்லாந்து அணியிடம் கத்தார் ஒருவேளை வெற்றி பெற்றாலும், அடுத்தடுத்த இரண்டு தோல்விகளால், உலக கோப்பை கால்பந்து தொடரில் கத்தார் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து விட்டது.
உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் கத்தார் கால்பந்து அணி அடுத்த சுற்றுக்கு செல்லாமல் லீக் சுற்றிலேயே வெளியேறி இருக்கும் நிகழ்வு கத்தார் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.