வெளிநாட்டு காதலனால் ஏமாற்றப்பட்ட இலங்கை பெண்: பணம் பறிப்பு முயற்சி முறியடிப்பு
இலங்கையில் பெண் ஒருவரை ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்ணை ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி
தென் பகுதி இலங்கை சேர்ந்த 25 வயது பெண்ணிடம் ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி செய்த பல்கலைக்கழக மாணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எல்பிட்டிய மீட்டியாகொடவில் வசிக்கும் இளம் பெண்ணிடம் இருந்து சுமார் 1 லட்சம் வரை ஏமாற்றி பணம் பறிக்க முயற்சி செய்த போது மீட்டியாகொட பொலிஸ் அதிகாரிகளால் பல்கலைக்கழக மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு காதலனின் மோசடி
இந்நிலையில் விசாரணையை தொடங்கிய பொலிஸாரிடம், தனக்கு தெரிந்த பிரேசில் நாட்டை சேர்ந்த நண்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க சம்பந்தப்பட்ட பெண்ணிடம் இருந்து பணத்தை பெற்ற முயன்றதாக கைது செய்யப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளான்.
அந்த பிரேசிலிய நபருடன் சம்பந்தப்பட்ட பெண் கடந்த 4 மாதங்களாக டெலிகிராம் செயலி மூலம் காதல் உறவில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து நெருங்கி பழகிய நிலையில், அவரது அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதாக மிரட்டி பணம் கேட்டதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
மேலும், பல்கலைக்கழக மாணவரிடம் அந்த பணத்தை கொடுக்குமாறும் பிரேசில் நாட்டை சேர்ந்த நபர் மிரட்டியுள்ளார், இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் புகார் கொடுக்கவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |