என்ன மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம்? ஹரியானா வாக்காளர் பட்டியலில் இருந்த பிரேசில் மாடல் அதிர்ச்சி
இந்திய வாக்காளர் பட்டியலில் தனது புகைப்படம் இருப்பது குறித்து அறிந்த பிரேசில் மாடல் அதிர்ச்சியடைந்துள்ளார்.
வாக்கு திருட்டு
காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, பாஜகவிற்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டு வருவதாக நீண்ட காலமாக விமர்சித்து வருகிறார்.

ஹரியானாவில் மொத்தமுள்ள 2 கோடி வாக்காளர்களில், 25 லட்சம் வாக்குகள் போலியானவை, அதாவது 8 இல் ஒரு வாக்கு திருடப்பட்டுள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதில், ஹோடல் தொகுதியில் ஒரு வீட்டில் 501 வாக்காளர்கள், பிரேசில் மாடலின் புகைப்படத்தைப் பயன்படுத்தி வெவ்வேறு பெயர்களில் 22 வாக்குகள் பதிவு செய்யப்பட்டது, ஒரு தொகுதியில் அதே படத்துடன் 100 வாக்குகள் சேர்க்கப்பட்டது என பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தன்னுடைய புகைப்படத்தை இந்திய வாக்காளர் பட்டியலில் வைத்து மோசடி செய்தது குறித்து பிரேசில் மொடல் லாரிசா அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதிர்ச்சியான பிரேசில் மாடல்
இது தொடர்பாக லாரிசா வெளியிட்டுள்ள வீடியோவில், "எனது பழைய புகைப்படம் இந்தியா தேர்தலில் மோசடி செய்ய பயன்படுத்தப்பட்டுள்ளது வியப்பாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. இது பைத்தியக்காரத்தனம். நாம் என்ன மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம்?
The name of the Brazilian Model seen in @RahulGandhi's press conference is Larissa. Here's her reaction after her old photograph went viral. pic.twitter.com/K4xSibA2OP
— Mohammed Zubair (@zoo_bear) November 5, 2025
இது தொடர்பாக என்னை நேர்காணல் செய்ய இந்திய பத்திரிகையாளர்கள் முயற்சி செய்கின்றனர். என் நண்பர் கூட இது தொடர்பான புகைப்பத்தை எனக்கு அனுப்பியுள்ளார்" என தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி இந்த தகவலை வெளியிட்ட பின்னர், பிரேசில் மொடலானா லாரிசா இந்தியாவில் பிரபலமாகியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |