காதலனை துப்பாக்கியால் சுட்ட காதலி: ஹோட்டலில் இருந்து நிர்வாணமாக தப்பியோட்டம்!
பிரேசில் அழகி ஒருவர் தலைக்கேறிய போதையில் காதனை துப்பாக்கியால் சுட்டு விட்டு ஹோட்டலில் இருந்து நிர்வாணமாக தப்பி ஓடி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலனுடன் ஏற்பட்ட தகராறு
பிரேசில் மாடல் அழகி மார்செல்லா எலன் பைவா மார்டினஸ், மற்றும் அவரது காதலன் ஜோர்டான் லோம்பார்டி இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர்.
இருவருக்கும் வரும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருந்துள்ளனர்.
இந்நிலையில் இருவரும் பிரேசில் நாட்டின் பிரேசிலியா பகுதியில் உள்ள பார்க்கவே ஓட்டலில் தங்கி உள்ளனர், இருவருமே உச்சகட்ட போதையில் இருந்துள்ளனர், அப்போது அதிகாலை மார்செல்லா எலன் மற்றும் காதலன் ஜோர்டான் லோம்பார்டி இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
சண்டையில் ஆத்திரமடைந்த காதலன் ஜோர்டான் லோம்பார்டி தான் வைத்திருந்த துப்பாக்கியால் காதலியை மிரட்டியுள்ளார்.
ஆனால் காதலன் கையில் இருந்த துப்பாக்கியை மார்செல்லா எலன் பிடுங்கி லோம்பார்டி-யை சுட்டு விட்டு ஹோட்டலில் இருந்து நிர்வாண கோலத்தில் தப்பியுள்ளார்.
போலிஸார் விசாரணை
காதலனை சுட்டு விட்டு நிர்வாண கோலத்தில் தப்பியோடிய மார்செல்லா எலன், ஹோட்டலின் வாயில் நின்று கொண்டு இருந்த லோம்பார்டியின் கார் ஓட்டுநரையும் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளார்.
Marcella Ellen Paiva Martins, modelo de 31 anos, se hospedou, juntamente ao noivo Jordan Lombardi, empresário de 39 anos, em um hotel em Brasília (DF) no dia 07 deste mês (segunda-feira). Na última terça-feira (08), o casal deu entrada em um hotel na Candangolândia (DF). pic.twitter.com/TEuicC2YRT
— Crimes Reais (@CrimesReais) November 14, 2022
இந்த பயங்கர சம்பவத்தில் படுகாயமடைந்த லோம்பார்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
ஹோட்டல் சம்பவம் குறித்து அறிந்த போலிஸார், வழக்கு பதிவு செய்து மார்செல்லா எலனை கைது செய்வதற்காக விசாரித்து வருகின்றனர்.