நான் அழிந்துவிட்டேன், ஒவ்வொரு நாளும் அழுகிறேன்: பிரசவத்தின்போது நேர்ந்த விபரீதத்தால் கதறும் பெண்
பிரேசிலில் பிரசவத்தின்போது ஏற்பட்ட தவறால் தனது சிசு உயிரிழந்ததால் பெண்ணொருவர் மருத்துவமனை மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிரசவத்தின்போது குழந்தை உயிரிழப்பு
பிரேசில் நாட்டின் Belo Horizonteவில் உள்ள மருத்துவமனையில் ஏழு மாத கர்ப்பிணி பெண் சாண்டோஸ், உயர் இரத்த அழுத்தம் காரணமாக அனுமதிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து ஒரு வாரத்தில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே மருத்துவர்கள் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளனர்.
அப்போது குழந்தையின் தலை துண்டிக்கப்பட்டு இறந்துள்ளது. மயக்கம் தெளிந்த சாண்டோஸ் தனது குழந்தை உயிரிழந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
Diamantina Noticias (facebook)
மனவேதனையடைந்த பெண்
மனவேதனை அடைந்த சாண்டோஸ் இதுகுறித்து கூறுகையில், 'நான் அழிந்துவிட்டேன். ஒவ்வொரு நாளும் நான் அழுகிறேன். என்னால் தூங்க முடியவில்லை. தினமும் என் மகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறேன். எப்படியும் நான் அவளை விரும்பினேன். அவளுக்கு வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்று எனக்கு தெரியும், ஆனால் நான் அவளை விரும்பினேன்' என தெரிவித்தார்.
எனினும், மருத்துவமனை நிர்வாகம் பிரசவம் தோல்வியடைந்ததற்கு மன்னிப்புக் கேட்டதையும், இறுதிச் சடங்கிற்கு செலவழிக்க முன்வந்ததையும் சாண்டோஸ் மற்றும் அவரது கணவர் உறுதிப்படுத்தினர்.
@R7
இந்த சம்பவம் குறித்து சாண்டோஸின் குடும்ப வழக்கறிஞர் ஜெனிஃபர் வாலாண்டே கூறும்போது, குழந்தையை பிரசவிக்கும்போது மருத்துவர் பல தவறுகளை செய்துள்ளார் என்பது பொலிஸ் விசாரணையில் தெரியவரும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த துக்க நேரத்தில் குடும்பத்திற்கு ஆழ்ந்த வருத்தம் மற்றும் அனுபதாபத்தை கூறியுள்ளது.