ஆட்டநாயகன் விருதை அவருக்கு தான் கொடுப்பேன்! வெற்றிக்கு பின் பேசிய நெய்மர்
உலக கோப்பை கால்பந்து போட்டியில் தென் கொரிய அணியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ள பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மர், தான் இந்த ஆட்டநாயகன் விருதை இன்னொரு வீரருக்கு வழங்க வேண்டும் என்றால் அதை ரபின்ஹா-வுக்கு வழங்கி இருப்பேன் என தெரிவித்துள்ளார்.
காலிறுதிக்கு முன்னேறிய பிரேசில்
கத்தாரில் நடைபெற்று வரும் FIFA உலக கோப்பை 2022-ல் திங்களன்று நடந்த சூப்பர் 16 ஆட்டத்தில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் வென்றதன் மூலம், காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
பிரேசில் அணிக்காக வினிசியஸ் ஜூனியர், நெய்மர், ரிச்சர்லிசன் மற்றும் லூகாஸ் பாகெட்டா ஆகியோர் முதல் பாதியில் ஒவ்வொரு கோல் அடித்தனர். ஆட்டத்தின் 76வது நிமிடத்தில் தென் கொரியா அணிக்காக சியுங்-ஹோ ரெட் டெவில்ஸ் ஒரு கோல் அடித்தார்.
Enjoying themselves ??#FIFAWorldCup | #Qatar2022
— FIFA World Cup (@FIFAWorldCup) December 5, 2022
இதனால் ஆட்டத்தின் இறுதியில் பிரேசில் 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ச்சியாக எட்டாவது முறையாக பிரேசில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
ரபின்ஹா-வுக்கு விருது
தென் கொரியா அணிக்கு எதிரான சூப்பர் 16 சுற்று ஆட்டத்தில் காயங்களுக்கு பிறகு களமிறங்கிய பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர், தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார்.
Happy with Brazil's performance, your @Budweiser Player of the Match Neymar Jr. praises all his teammates and singles out Raphinha to share the award with!
— FIFA World Cup (@FIFAWorldCup) December 6, 2022
?? #BRAKOR ?? #Budweiser #POTM #YoursToTake #BringHomeTheBud @budfootball pic.twitter.com/GhOya0us6T
அத்துடன் அவருக்கு இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் போட்டி முடிந்து வர்ணனையாளரிடம் உரையாடிய பிரேசில் வீரர் நெய்மர், இந்த வெற்றி அணியின் ஒட்டுமொத்த வீரர்களின் சிறப்பான செயல்பாட்டிற்கு கிடைத்த வெற்றி என்று பாராட்டினார்.
அத்துடன் இந்த போட்டியில் உங்களுக்கு அளிக்கப்பட்ட விருது வேறு யாருக்காவது வழங்கப்பட வேண்டும் என்றால் யாருக்கு அதை நீங்கள் வழங்குவீர்கள் என்று தொகுப்பாளர் கேட்டதற்கு, அணியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடினார்கள், குறிப்பிட்ட ஒரு நபருக்கு என்றால் இந்த விருதை ரபின்ஹா-வுக்கு வழங்குவேன் என நெய்மர் பதிலளித்தார்.