COP30 காலநிலை உச்சி மாநாட்டிற்காக அழிக்கப்படும் காடுகள்: அமேசான் நெடுஞ்சாலை சர்ச்சை
COP30 காலநிலை உச்சி மாநாட்டிற்காக அமேசான் காடுகளில் உள்ள மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
அமேசான் நெடுஞ்சாலை சர்ச்சை
COP30 காலநிலை உச்சி மாநாடுக்காக பிரேசில் அமேசான் மழைக்காடுகள் வழியாக ஒரு பிரம்மாண்ட நெடுஞ்சாலை அமைக்கப்படுவது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன.
ஐ.நா. காலநிலை மாற்ற மாநாட்டிற்காக (COP30) பல்லாயிரக்கணக்கான பிரதிநிதிகளை வரவேற்கும் நோக்கில் இந்த சாலை கட்டப்படுகிறது.
அமேசான் காடுகள் அழிப்பு
நவம்பர் மாதம் நடைபெறும் COP30 காலநிலை உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளும் 50,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் மற்றும் உலக தலைவர்கள் போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ளாமல் இருக்க இந்த நான்கு வழி நெடுஞ்சாலை திட்டமானது அமைக்கப்படுகிறது.
இதற்காக அமேசான் காடுகளில் கணிசமான அளவு மரங்கள் வெட்டப்பட்டு வனப்பகுதி அழிக்கப்பட்டுள்ளது.
கார்பன் உறிஞ்சுதல் மற்றும் பல்லுயிர் பெருக்கம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த காடுகள் அழிக்கப்படுவது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலையில் மரங்கள் வெட்டப்படுவது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
மாநில அரசு இந்த நெடுஞ்சாலை நிலையானது என்று கூறினாலும், உள்ளூர் மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைப்பதற்காக நடத்தப்படும் உச்சி மாநாட்டின் நோக்கத்திற்கு இந்த காடுகள் அழிப்பு முற்றிலும் எதிரானது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
கேள்விக்குறியாகும் வனவிலங்குகளின் பாதுகாப்பு
இந்த நெடுஞ்சாலை திட்டமானது வனப்பகுதிக்குள் வனவிலங்குகளின் நடமாட்டத்தை சீர்குலைக்க கூடும் என்று இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.
அத்துடன் இது வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |