X தளத்தின் தடையை நீக்க மறுத்த பிரேசில் உச்ச நீதிமன்றம்: அபராத தொகை செலுத்தியதில் ஏற்பட்ட குளறுபடி
எலான் மஸ்க்கின் சமூக ஊடக தளமான X பிரேசிலில் மீண்டும் தனது சேவைகளை தொடங்க முயற்சித்து வருகிறது.
தடை செய்யப்பட்ட X
எலான் மஸ்க்கின் பிரபலமான சமூக ஊடக தளமான X (முன்னாள் ட்விட்டர்) கருத்து கட்டுப்பாடு மற்றும் சட்டரீதியான பிரதிநிதித்துவம் தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாததை அடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல X தளம் இடைநீக்கம் செய்யப்பட்டது.
21 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களுடன், X க்கு ஒரு குறிப்பிடத்தக்க சந்தையை பிரேசில் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இருந்த போதிலும் X தளம் இணக்கமற்றதற்காக பல அபராதங்களை எதிர்கொண்டது.
நீக்கப்படாத தடை
இந்நிலையில், X தளம் மீண்டும் தனது சேவையை பிரேசிலில் தொடங்கும் முயற்சியில், நீதிமன்றம் விதித்த அபராதத்தை செலுத்தும் முயற்சியில் சமீபத்தில் X தளம் இறங்கியது.
ஆனால் நீதிமன்றம் விதித்த அபராத்தை X தளம் தவறுதலான வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ததை அடுத்து, வெள்ளிக்கிழமை பிரேசிலின் உச்சநீதிமன்றம் X தளம் மீதான இடைநீக்கத்தை நீக்க மறுத்துவிட்டது.
இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரேஸ் பேசிய போது, அபராத தொகையான 28,600,000 reais [$5.24 மில்லியன்] வைப்புத்தொகை இந்த வழக்கு நடவடிக்கையுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |