வீடியோ வெளியிட்ட சில நொடியில் பிரபல பாடகிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை! நடுவானில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
பிரபல பாடகி இசை கச்சேரியில் கலந்து கொள்வதற்காக விமானத்தில் சென்ற போது எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டில் பிரபல பாடகியாக வலம் வந்து கொண்டிருந்தவர் மரிலியா மென்டோன்கா(26).
இவர் நேற்று முன்தினம் மினாஸ் ஜெரைஸ் மாகாணத்தில் உள்ள கரட்டிங்கா என்ற பகுதியில் நடக்க இருந்த இசைக்கச்சேரி ஒன்றில் கலந்து கொள்ள தனி விமானத்தில் பயணம் செய்துள்ளார்.
அப்போது கரட்டிங்கா என்ற அந்த இடத்தை சென்றடைவதற்கு 12 கி.மீ முன்னதாகவே விமானம் அருவி பாறையில் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் அவரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இவர் 2019ஆம் ஆண்டின் லத்தீன் கிராமி விருது பெற்றுள்ளார். செர்டனேஜோ என்று அழைக்கப்படுகிற பிரேசிலிய நாட்டுப்புற இசையில் மிகப் பெரிய பெயர்களில் ஒன்றாக இவரது பெயர் திகழ்ந்து வருகின்றது.
பாடகி மரிலியாவின் திடீர் மரணம் இசைப்பிரியர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இந்நிலையில் இவர் கடைசியாக இன்ஸ்டாவில் வெளியிட்ட வீடியோ பயங்கர வைரலாகி வருகின்றது.