புறப்பட்ட சில கணங்களில் தீப்பிடித்த விமானம்
பிரேசிலிய விமான நிலையத்தில் புறப்படும்போது, விமானத்தின் எஞ்சின் தீப்பிடித்து எரிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
டெல்டா ஏர்லைன்ஸ் விமானம்
பிரேசிலின் சா பாலோவில் உள்ள Guarulhos சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் 272 பயணிகளும், 14 பணியாளர்கள் இருந்தனர்.
ஹார்ட்ஃபீல்ட்-ஜேக்ஸன் அட்லாண்டா சர்வதேச விமான நிலையத்திற்கு டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது.
விமானம் மேலே ஏறத் தொடங்கியபோது எஞ்சினில் தீப்பற்றியது. இது மெல்ல மெல்ல பரவத் தொடங்க பீதியடைந்த பயணிகள் அலறியுள்ளனர்.
துரிதமாக செயல்பட்ட விமானி அவசரமாக விமானத்தை முனையத்திற்கு திருப்பினார். அத்துடன் mayday என்று அழைப்பு விடுத்தார்.
விமானம் எரிந்து கொண்டிருந்தபோதே
பின்னர் விமானம் பாதுகாப்பாக விமான நிலையத்திற்கு திரும்பியது. அங்கு விமான மீட்பு மற்றும் தீயணைப்புப் படையினர் அதை வரவேற்றனர் என்று டெல்டா செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
அதன் பின் பயணிகள் அனைவரும் பேருந்து மூலம் முனையத்திற்கு அழைத்து வரப்பட்டனர் என்றும் அவர் கூறினார்.
விமானம் தீப்பிடித்த காட்சி ஏர்பஸ் A330-300 ரக விமானத்தில் பயணித்த ஒரு பயணி எடுத்த காணொளியில் பதிவானது.
மிரர் பத்திரிகை, விமானம் எரிந்து கொண்டிருந்தபோதே அதிலிருந்து பொருட்கள் விழத் தொடங்கியதாகவும், அதனால் கீழே தரையில் தீப்பிடித்ததாகவும் தெரிவித்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |