இறந்த மாமாவை சக்கர நாற்காலியில் வைத்து வங்கி அழைத்து வந்த பெண்! நடந்தது என்ன?
பிரேசில் பெண்மணி ஒருவர் இறந்த தன்னுடைய மாமாவை வங்கிக்கு அழைத்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
நான் குற்றமற்றவள்
பிரேசிலில் இறந்த தனது மாமாவை வங்கிக்கு கொண்டு சென்றதாக கூறப்படும் எரிகா டி சூசா வியேரா நூனஸ் (Erika de Souza Vieira Nunes) சிறையில் இருந்து விடுதலை ஆன பிறகு முதன்முதலாக பேட்டி அளித்துள்ளார்.
கண்ணீர் மல்க பேசிய அவர், "நான் ஒரு மிருகம் இல்லை" என்று தனது குற்றமற்ற நிலையை உறுதிப்படுத்தினார்.
வங்கி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது
ரியோ டி ஜெனிரோவில் கடந்த மாதம் இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்தது. வங்கி பாதுகாப்பு கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில், எரிகா தனது உயிரிழந்த மாமா பவுலோ ராபர்ட்டோ பிராகா-வை சக்கர நாற்காலியில் தள்ளிச் செல்வது பதிவாகியுள்ளது.
அத்துடன் அவர், தனது மாமாவின் ஆவணங்களை பயன்படுத்தி கடன் பெற முயன்றதாக கூறப்படுகிறது.அந்த காட்சிகளில், அவர் தனது மாமா கையில் பேனாவை வைத்திருப்பதும், கையெழுத்திட வற்புறுத்துவதும் காண முடிகிறது.
எரிகா நிலைப்பாடு
எரிகா தனது மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். தனது மாமா உயிருடன் இருப்பதாகவே அவர் உண்மையாக நம்பியதாக கூறியுள்ளார்.
மேலும், தான் மருந்துகளின் தாக்கத்தால் இவ்வாறு செய்ததாகவும், தனக்கு பரிந்துரைக்கப்பட்ட தூக்க மாத்திரைகளை விட அதிக அளவு எடுத்துக் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் தனது தலையைத் தாங்கி பிடிக்குமாறு தனது மாமா கேட்டதாகவும், இதனால் அவர் உயிருடன் இருப்பதாகவே நம்பினேன் என்றும் கூறியுள்ளார்.
வழக்கு விசாரணை தொடரும்
மாமா பிராகாவின் மந்த நிலையைக் கண்டு வங்கி ஊழியர்கள் சந்தேகப்பட்டு காவல்துறையை தொடர்பு கொண்டனர்.
எரிகா மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு, மனநல சிகிச்சை பெற்று வருகிறார்.
எரிகாவின் கதை ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலர் சந்தேகம் தெரிவித்தாலும், அவரது மகன் தனது தாயாரின் குற்றமற்ற நிலையை பொது மன்றத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. அதிகாரிகள் எரிகாவின் கூற்றுக்களையும் பிராகாவின் மரணத்தைச் சுற்றிய சூழ்நிலைகளையும் விசாரித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |