தித்திக்கும் சுவையில் கல்யாண வீட்டு பிரட் அல்வா.., எப்படி செய்வது?
கல்யாண வீட்டில் பரிமாறப்படும் பிரட் அல்வாவின் வாசனை, இலையில் பரிமாறும் போதே ஆளை சுண்டி இழுக்கும்.
இந்த பிரட் அல்வா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பு உண்ணும் ஒரு இனிப்பாகும்.
சுவையான கல்யாண வீட்டு ஸ்பெஷல் பிரட் அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ரஸ்க்- 15
- சர்க்கரை- 150g
- முந்திரி- 10
- உலர் திராட்சை- 10
- ஹார்லிக்ஸ்- 10g
- நெய்- 20ml
- எண்ணெய்- 20ml
- ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்துவைத்துள்ள ரஸ்க்கை சேர்த்து ஒன்று இரண்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் அரைத்து வைத்துள்ள ரஸ்க் மற்றும் முந்திரி சேர்த்து எண்ணெய் ஊற்றி கிளறிய பின் அடுப்பை பத்த வைத்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
வறுத்து எடுத்த ரஸ்க் துகளை நன்கு ஆறவைக்கவும். பின் அதனுடன் ஹார்லிக்ஸ் சேர்த்து கலந்து வைத்து கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் ரஸ்க் துகள் இருக்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி அதனுடன் ஏலக்காய் தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து கரையும் வரை நன்கு கொதிக்கவைக்கவும்.
கொதித்து வந்ததும் அதில் வறுத்த ரஸ்க் துகளை சேர்த்து கிளறவும். இது நன்கு கெட்டியாகி வந்ததும் அதனுடன் உலர் திராட்சை சேர்த்து கிளறவும்.
இறுதியாக இதில் அவ்வப்போது நெய் சேர்த்து கிளறி அல்வா பதம் வந்ததும் இறக்கினால் சுவையான கல்யாண வீட்டு ஸ்பெஷல் பிரட் அல்வா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |