பிரான்சில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல பிரித்தானிய தம்பதி: வெளியான அதிரவைக்கும் தகவல்கள்
பிரான்சில் வாழ்ந்துவந்த பிரபல பிரித்தானிய தம்பதி சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் அதிரவைக்கும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல பிரித்தானிய தம்பதி சடலமாக மீட்பு
பிரித்தானியாவிலிருந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் பிரான்சிலுள்ள தங்கள் இரண்டாவது வீட்டுக்கு குடிபெயர்ந்துள்ளனர் ஒரு தம்பதியர்.
தெற்கு பிரான்சிலுள்ள Les Pesquiès என்னுமிடத்தில் அந்த வீடு அமைந்துள்ளது.
நேற்று மதியம் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் இந்த தம்பதியர் வீட்டுக்குச் செல்ல, அவர்கள் இருவரும் உயிரற்ற நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசாரை அழைத்துள்ளார்.
மரங்கள் அடர்ந்த பகுதியில், அந்த வீடு தனியாக இருந்ததால், யாராவது அந்த வீட்டில் கொள்ளை அடிக்க முயற்சிக்கலாம் என்றும், கொள்ளை முயற்சியின்போது, தம்பதியர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிசார் தெரிவித்திருந்தார்கள்.
புதிய தகவல்கள்
இந்நிலையில், அந்த சம்பவம் குறித்த புதிய தகவல்கள் சில வெளியாகியுள்ளன.
உயிரிழந்த பிரித்தானியர்களின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. Andrew Searle மற்றும் Dawn Searle என்னும் அந்த தம்பதியர் தங்கள் 60 வயதுகளிலிருப்பவர்கள்.
Andrew, பிரித்தானியாவில் குற்றவாளி கும்பல்கள் மற்றும் தீவிரவாதத்துக்கு எதிராக போராடும் நிதி விசாரணை அதிகாரியாக பணியாற்றிவந்துள்ளார்.
அதற்குப் பிறகுதான் Andrew மற்றும் Dawn இருவரும் பிரான்சுக்கு குடிபெயர்ந்துள்ளார்கள்.
ஆகவே, குற்றவாளிக் கும்பல் ஒன்று, பிரித்தானியாவிலிருந்து அவர்களைப் பின் தொடர்ந்துவந்ததாக கூறப்படுகிறது.
அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள்தான் தற்போது Andrew, Dawn தம்பதியரைக் கொலை செய்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |